பக்கம் : 359
 

எங்கள் முன்னை - எங்களுடைய முன்னும், நுங்கள் தன்மை - உங்களுடைய பண்பு,
அன்னநீர - அவ்வாறான தன்மையுடையனவே, என்று - என்று கூறி, பின்னை ஏத்தினான்
- மேலும் விசயதிவிட்டர்களை விஞ்சையன் போற்றினான், (எ - று.)

விசயதி விட்டர்கள் முறையே வெண்சுடர் ஒளியும் கருஞ்சுடர் ஒளியும் உடையவர்கள்.
திங்களினது வெண்கதி்ர் வட்டம் திலதவட்டம் என்பன விசய திவிட்டர்களைக் குறிக்கும்.
இவ்வுலகத்துயிர்த்தொகைகட்கு எளியராக வேண்டுமென்று நீவிர் தோன்றினாலும்,
நும்முடைய ஒளிகள் மிக்கனவாதலால் இவ்வுலகத்தவரோடு சேரமாட்டீர்கள். அவ்வாறே
எங்கட்கு முன்னும் ஆவிர்களென்று கூறி மருசி விசய திவிட்டர்களை மேலும் போற்றினான்
என்க. என்றிரண்டுந் தொகுத்தல்; எளிய்யர்; விரித்தல்.

( 71 )

தந்தையைக் காணச்செல்வோம் என்று
விசயதிவிட்டர்கள் மருசியை அழைத்தல்.

502. இமைகள்விட்ட 1நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
மமைகமாற்றம் நும்மை2யெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொண்மாலை 3தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று 4திகழுகின்ற சோதியார்.

 

     (இ - ள்.) இமைகள்விட்ட - இமைத்தல் தொழிலை நீங்கிய, நோக்கம் ஏற -
கண்பார்வையானது விசயதிவிட்டர்கள்மேற்செல்ல, இன்னபோல்வ சொல்லலும் - இவைகள்
போன்ற சொற்களை மருசி கூறுதலும், சிமைகொள் தேவர்போல நின்று - மலையுச்சியை
வாழுமிடமாகக்கொண்ட தேவர்களைப்போல நிலைத்து, திகழுகின்ற சோதியார் -
விளங்குகின்ற ஒளியையுடைய விசயதிவிட்டர்கள், மாற்றம் அமைக - எம்மைப் புகழுகின்ற
இந்த மொழிகளை விடுக, நும்மை - தங்களை, எங்கள் அடிகள்காண - எங்கள் தந்தையர்
பார்க்குமாறு, ஏகுவாம் - செல்லுவோம், சுமைகொள் மாலை - சுமையாக
இருத்தலைக்கொண்ட மாலையை, தொடு - அணிந்த, களிறு எருத்தம் - யானையின்
பிடரியிலே, ஏறுக என்றனர் - ஏறுக என்று கூறினார்கள், (எ - று.)


(பாடம்) 1. நோக்கமோடு. 2. யெம்மடிகள். 3. மால்களிற். 4. எழுந்திலங்கு.