(இ - ள்.) அகில்எழு கொழும்புகை-அகிற்கட்டை புகைக்கப்படுதலினால் எழுகின்ற மிகுந்த புகையானது; மஞ்சின் ஆடவும்-முகில்கள்போல அசைந்து தோன்றுதலாலும்; முழா-மத்தளங்கள்; முகில் இசை என முரன்று விம்மவும்-முகிலினது இடியைப்போல ஒலித்து மிகுதலாலும்; துகிலிகை கொடி அனார்-ஓவியத்திலெழுதப்பெற்ற பூங்கொடியை ஒத்தவர்களான மகளிர்; மின்னின் தோன்றவும் - மின்னல்போல விளங்கிக் |