பக்கம் : 374 | | 521. | அறவிய 1மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப் பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் மறவியின் மயங்கி வாழும் மனிதர்க்கு 2நிகழ்த்த லாமோ. | (இ - ள்.) அறவிய - அறத்தன்மை பொருந்திய, மனத்தர் அன்றி - உள்ளத்தையுடையவரல்லாமல், அழுங்குதல் இயல்பினார்க்கு - வருந்துந் தன்மைபொருந்திய உள்ளமுடையவர்கட்கு, பிறவியை அறுக்கும் - பிறவியைப் போக்கவல்ல, பெருநிலை எய்தல் ஆம்ஒ - பெரும் பதவியை அடைதல் முடியுமோ? வெறி மயங்கு உருவம் கண்ணி - நறுமணம் பொருந்திய அழகிய முடிமாலையை உடைய, விஞ்சையர் - வித்தியாதரர்களின், விளங்குதானம் - சிறப்பமைந்த கொடையை, மறவியின் மயங்கி வாழும் - மறப்பினால் மயக்கமுற்று வாழ்கின்ற, மனித்தர்க்கு - மனிதர் களிடத்தில், நிகழ்த்தல் ஆமோ - கொடுக்கலாமோ? (எ - று.) பிறவியை அறுக்குங் காட்சிப்பெருநிலை என்பது சைனமதத்தின் இரத்தினத் திரயத்துள் ஒன்றாகும். அது தக்கார்க்கே உண்டாகுமல்லாமல் எல்லோர்க்கும் உண்டாகமாட்டாது. அதுபோல் விஞ்சையர்களுடைய கிடைத்தற்கரிய மகட்கொடையைப் பெற்றுச் சிறப்புறுதல் விஞ்சையர்கட்குத் தான் இயலுமேயல்லாமல் மக்கட்கு இயலாதென்கிறான் மருசி. | ( 91 ) | 522. | அருங்கடி கமழுந் தாரை யழிமதக் 3களிற்றி னாற்றல் மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ 4இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும் வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை 5மன்னா. | (இ - ள்.) அருங்கடி - அருமையான மணம், கமழும் - வீசுகின்ற, தாரை - தாரையாகவுள்ள, அழிமதம் - மிகுந்த மதநீரைக்கொண்ட, களிற்றின் ஆற்றல் - யானையின் வல்லமையை, மரம்கெட - மரங்கள் அழியும்படி, தின்று வாழும் - உண்டு வாழுகின்ற, களபக்கு மதிக்கல் ஆமோ - யானைக் குட்டிக்கு மதிக்க முடியுமோ, இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை - இரங்கத்தக்க இழிந்த அற்ப வாழக்கையையுடைய, இநிலத்தவர்கட்கு - இந்த நிலவுலகத்தில் உள்ளவர்கட்கு என்றும் - எப்பொழுதேனும், எமர் - எம்மைச்சேர்ந்த வித்தியாதரரின், பெருமை - பெருமையை, மன்னா - அரசனே! வரங்கிடந்து எய்தல்ஆமோ - பெறுதற்கு வேண்டுதல் செய்து பெருமுயற்சி செய்தேனும் அடைய முடியுமோ? (எ - று.) |
| (பாடம்) 1. மனித்தர். 2. நிகர்க்கலாமே என்பன பாட பேதங்கள். 3. களிற்றினான்றன். 4. இரங்கெட. 5. மன்னோ எண்பன பாடபேதங்கள். | | |
|
|