பக்கம் : 378
 
  பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னவ தென்றுக் கொன்று துணியுமோ 1சொல்ல வென்றான்.
 

      (இ - ள்.) இன்னவன் - இன்னான், இன்னநீரான் - இன்ன தன்மையை உடையான்,
(அவன்) இன்னவே எய்துக என்று - இப்படிப்பட்டவற்றையே அடைக என்று, முன்னவன்
செய்த மொய்ம்பின் - முதற் கடவுள் விதித்த விதிப்படியே, வினைகளே -
அவரவர்களுடைய இருவினைகளே, முயல்வது அல்லால் - முயற்சி புரிகின்றன
அஃதல்லாமல், பின்னவன் பிறந்து - ஒருவன் தாழ்ந்தவனாகப் பிறந்துவிட்டு (தனக்குத்தகாத
உயர்ந்த பொருள் கிடைக்கும்போலத் தோன்றுமாயின்), தன்னால் பெறுதலுக்கு உரிய ஆய
- தன்னால் அடைவதற்கு உரிமையுள்ளனவாக, துன்னுவது - நெருங்கிச் சேர்வது, என்று -
என்று எண்ணி, உக்கு ஆன்று - மனம் உகந்து மேம்பட்டு, சொல்ல - சொல்லுவதற்கு,
துணியுமோ என்றான் - துணிவு கொள்வானோ என்று கூறினான், (பயாபதி மன்னன்)
(எ - று.)

இறைவனானவன் இத்தன்மையுடையோன் இன்னவாறான இன்பத்தை யடைகவென்று
அமைந்திருக்க, அம் முறைவழியாகச் செல்லாமல், மக்களாகிய நாங்கள் எம்முடைய
நிலைமைக்கு மேம்பட்ட இன்பம் கிடைக்கும்போல் தோன்றுமாயின், அக்காலை இஃது
எமக்கு ஏற்ற இன்பமே; ஆகவேதான் இஃது எம்மைச் சேர்கின்றது என்று எண்ணி
மீறிச்சொல்வதற்கு எம் இயற்கை இடங்கொடாது என்று பயாபதி மன்னன் இயம்புகிறான். மருசி கொண்டுவந்த திருமுகத்திற்கு உடனே பதிலுரைக்காமையின் காரணத்தை மன்னன்
இதனால் உணர்த்தினான். எய்துக என்று தொகுத்தல் விகாரம்.
 

( 97 )

528. மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் 2முயன்று3நோற்றார்க்
கொப்புடைத் 4துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ 5மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
6தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்.
 

      (இ - ள்.) மெய்ப்புடை தெரிந்து - உண்மை நிலையை ஆராய்ந்து, மேலை -
முற்பிறப்பில், விழுதவம் - சிறந்த தவத்தை, முயன்று நோற்றார்க்கு - முயற்சியுடன்
செய்தவர்க்கு, உங்கள் சேரி - நீங்கள் சேர்ந்துள்ள இடமாகிய வித்தியாதர உலகத்தின்,
உயர்நிலை - உயர்ந்த நிலைமையை யுடைய, செல்வம் எல்லாம் - செல்வங்கள் முற்றும்,
ஒப்புடைத்து -


(பாடம்) 1. தக்கான். 2. இயன்று. 3. சென்றார். 4. தங்கள். 5. எய்த.
6. தப்படித் தாக நீமுன் மொழிந்ததே யமையுமென்றான், என்பன பாடபேதங்கள்.