பக்கம் : 38
 
     காணப்படுதலாலும்; மாடம்-நகரத்திலே உயர்ந்து விளங்கும் வீடுகள்; மலையொடு
இகலின - மலைகளோடு மாறுபட்டுத் தோன்றின. (எ - று.)

     மாடங்களுக்கும் மகளிர் கூந்தலுக்கும் கொங்கைகட்கும் ஆடைகட்கும்
மணமூட்டுதற்கிடப்பட்ட அகிற்புகை என்க.

     புகைத்திரள்-முகிலுக்குவமை. முழவின் முரற்சி அம்முகின் மூழக்கத்திற்குவமை.
துகிலிகை - எழுதுகோல். கொடியனார் என்றது ஈண்டு உவமங்குறியாமல் வாளா மகளிர்
என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. அம்மகளிர் - முகிலிடைத் தோன்றி மறையும்
மின்னலுக்குவமை.

( 6 )

மாடங்களின் சிறப்பு

42. 1கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.
 

     (இ - ள்.) கண்எலாம் கவர்வன கனக கூடமும் - நோக்குகின்றவர் களுடைய
கண்களையெல்லாம் தம் அழகினால் தம்மிடம் இழுப்பனவான பொன்னினாலாகிய
கூடங்களும்; வெள்நிலா சொரிவன வெள்ளி வேயுளும் - வெண்மையான திங்கள்
ஒளியைப்போன்ற ஒளியை வீசுவனவாகிய வெள்ளியினாலாகிய கூரையும்; தண்நிலா
தவழ் - குளிர்ந்த திங்கள் ஒளியை; பரப்பும் மணி - திங்கள் ஒளிக்கற்கள் பதிக்கப்பட்ட;
தலமும் - தரையிடங் களும்; சார்ந்து - பொருந்தி; மதலை
மாடம் - கொடுங்கைகளையுடைய மாளிகைகள்; மண்ணினால் இயன்றில - (இங்ஙனம்
பொன் முதலியவற்றால் இயற்றப்பட்டிருந்தனவேயன்றி) மண்ணினால் இயற்றப்பெற்றில. (எ -
று.)

     கனக கூடம்-பொன்னாலாகிய மன்றம். இதனைப் பொன்னம்பலம் என்ப. வெள்ளி
வேயுள் என்றது வெள்ளியால் வேயப்பட்ட கூரையினை. தண்ணிலாத் தவழ்மணி என்றது
சந்திரகாந்தக் கல்லினை. மதலை மாடம் பொன் முதலியவற்றால் இயன்றனவே
அந்நகரத்துள்ளன; மண்ணால் இயன்ற மாடங்கள் அங்கில்லை என அந்நகரச் செல்வ
மிகுதி தெரித்தோதியவாறாம்.

( 7 )

     (பாடம்) 1. கண்ணிலாக் கவர்வன.