பக்கம் : 381
 

விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்

531. மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
1அஞ்சலில் தானை வேந்தே 2மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ
 

     (இ - ள்.) அஞ்சலில் தானை வேந்தே - பகைவர்க்கு அஞ்சாத படையையுடைய
அரசனே, மஞ்சு இவர் மணம்கொள் சோலை - முகில்கள் தவழப்பெற்றதும் மணத்தைக்
கொண்டதுமான பொழிலையுடைய, மணிவரைச் சென்னி வாழும் - அழகிய மலையின்
முடியிலே வாழுகின்ற, விஞ்சையர் - வித்தியாதரர்கள் கலைஞர்கள்), விச்சையாலே
விழுமியர் என்பது அல்லால் - பல கலைகளின் உணர்வினாலே சிறந்தவர்கள்
என்பதல்லாமல், அவரும் மனிதரே - அந்த வித்தியாதரர்களும் மனிதர்களைப்
போன்றவர்களே, வெம்சுடர் விளங்கு வேலோய் - வெவ்விய ஒளியினால் விளங்குகின்ற
வேற்படையை உடையவனே! யாதும் வேற்றுமை இன்மை கேண்மோ - யாதும் வேறுபாடு
இல்லாமையைக் கேட்பாயாக! (எ - று.)

வித்தியாதரர்கள் என்போர், மனிதர்களைக் காட்டிலும் பல கலைகளை நன்கு கற்றுத்தேறியுள்ள தன்மையினால் சிறந்தவர்களே யல்லாமல் வேறுவகையினால் சிறந்தவர்கள்
அல்லர் என்றுகூறி மேற்செய்யுள்களில் மருசி அதனை விளக்கத் தொடங்குகிறான்.
கேண்மோ; மோ : முன்னிலை யசை.

( 101 )

விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்

532. மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் 3களிநல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் காதற் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பாள்.
 

இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர்

      (இ - ள்.) மண்நவில் - மார்ச்சனை பொருந்திய, முழவின் - மத்தளம் போல்
ஒலிக்கின்ற, மாநீர் - மிகுந்த நீரினாற் சூழப் பெற்ற, பவபுரம் உடைய மன்னன் -
பவபுரத்திற்கு உரிய அரசனாகிய, பண்நவில் - இசை பழகுகிற,


(பாடம்) 1. அஞ்சிய. 2. மனிசரே என்பன பாடபேதங்கள். 3. களிஞல் யானை என்பது பாடபேதம்.