(இ - ள்.) போற்றா - வணங்காத, வேந்து உடைமானம் எல்லாம் - அரசர்களுடைய பெருமகளை எல்லாம், வேலினால் விடுத்த வேந்தே - வேற்படையினாலே போக்கிய அரசனே!, தேன் துணர் இலங்கு கண்ணி - தேனைக்கொண்டு கொத்தாக விளங்குகின்ற முடிமாலையையுடைய, தேவன் - நமிமன்னவன், அத்தேவர்கோனை - தேவர்கட்கெல்லாம் தலைவனான அந்த அருகக்கடவுளை, தீம் தொடை நரம்பின் - இனிது தொடுத்தலையுடைய நரம்பினது, தெய்வச் செழுங்குரல் - தெய்வத்தன்மையுள்ள செழிப்புள்ள குரலாலே, சிலம்ப - ஒலியுண்டாக, ஏத்த - போற்றுதலைச் செய்ய, பூந்துணர் - பூங்கொத்துக்களைக்கொண்ட, கற்பலோகம் - தெய்வலோகம், புடைபெயர்ந் திட்ட-அவ்விசையின்மீதுள்ள விருப்பால் தம்மிடம் விட்டுப்பெயர்ந்தன, (எ-று.) தேவலோகத்தவரும் நமியின் இசையைக் கேட்டுத் தம்மிடம் விட்டு அவ்விசை தோன்றிய நிலத்திற்கு வரலானார்கள். தீந்தொடை நரம்பு - கண்ணுக்கு இனிமையாகத் தொடுக்கப்பட்ட நரம்பு. இப்பாடலால் தெய்வலோகத்தார் இசையில் ஈடுபட்டமை தனியே இயம்பப்பட்டது. |
(இ - ள்.) மிடைமணிப் பூணினான் - நெருங்கிய மணியினாலாகிய பூணையுடைய ஆதிசேடன், ஈண்டுவந்து - இங்கே வந்து, மாண்ட - மாட்சிமைப்பட்ட, தன் நிலைமை உள்ளி - தன்னுடைய நிலைமையை நினைத்து, வருபொருள் மெய்ம்மை நோக்கி - வரப்போகின்ற பொருளின் |