(இ - ள்.) அங்கு - அப்போது, இச்சை உரைப்பக் கேட்டு - நமிமன்னன் தன்னுடைய விருப்பத்தைக் கூறுதலைக்கேட்டு, ஆங்கு - உடனே, இமையவர் இயற்கை எய்தும் - தேவர்களின் தன்மையை அடையவல்ல, விச்சையும் - கலையும், துணையும் - துணையாற்றலையும், வெள்ளி விலங்கலும் கொடுத்து - வெள்ளி மலையையும் ஈந்து, வேந்தாய் - அரசனாய், நிச்சமும் - நாடோறும், நிலாக என்று - இவைகள் நினக்கு விளங்குவதாக என்று வரங்கொடுத்து, நிறுவிப்போய் - நிலையாக வாழுமாறு கூறிச்சென்று, ஆயிரம் பணத்தினால் - ஆயிரம் படங்களையுடைய ஆதிசேடன், நிலத்தின் கீழ் - நிலவுலகத்தின் கீழேயுள்ள, தன் அச்சம்இல் உலகம் சேர்ந்தான்- தன்னுடைய அச்சமற்ற உலகத்தை யடைந்தான், (எ - று.) ஆதிசேடன், நமி மன்னனுக்கு அவன் வேண்டியவாறாதற்குரிய வித்தை முதலியவைகளை யளித்துத் தன்னுடைய உலகத்தை யடைந்தனன் என்பதாம். நிலாக - நிலாவுக என்னும் வினைமுற்றின் விகாரம். |