(இ - ள்.) உலகுஎலாம் - உலகம் முழுவதும், யாவனால் படைக்கப் பட்டது - எவனால் உண்டாக்கப்பட்டதோ, யாவன் பாத்தது - எவனால் விரிவுபடுத்தப்பட்டதோ, எவனால் வணக்கப்பட்டது - எவனால் வணங்குமாறு செய்யப்பட்டதோ, யாவனது அகலம் சேர்ந்து - எவனுடைய மார்பைச் சேர்ந்து, பூவினாள் பொறி ஒன்று ஆனாள் - பூவில் வாழ்பவளாகிய திருமகள் ஒன்றுபட்டுள்ளாளோ, யாவன் நம்மை புண்ணிய உலகம்காண ஏவினான் - எவன் நம்மை நல்லுலகத்தைக் காண ஏவினானோ, உலகம் எல்லாம் யாவனது - இவ்வுலகம் எல்லாம் எவனுடையதோ? (எ - று.) ‘மற்றவன் அருளின் வந்தான்‘ என்று அடுத்த செய்யுளோடு தொடரும். இப்பாடல் அருகக்கடவுளின் தன்மையைக் கூறுகிறது. உலகத்தைப் படைத்துப் பாகுபடுத்தியவன்; தன்னை வணங்குமாறு செய்தவன்; திருமகள் மார்பில் பொருந்தப்பெற்றவன்; தன்னையடைந்தாரை நல்லுலகத்திற்கு அனுப்புபவன்; உலகத்திற்கு உரிமையுடையவன்; ஆகிய எல்லாம் அருகக்கடவுளே என்க. |
(இ - ள்.) மரகத மணிக்குன்று ஒப்ப - மரகதமணியினால் இயன்ற மலையை ஒத்திருக்க, சுற்றி நின்று இலங்கும் - சுற்று வட்டத்தில் விட்டுவிட்டு விளங்குகிற, சோதி - ஒளியினையுடைய, தோள்வலி எனும் பேரான் - வாகுவலி என்னும் பெயரையுடையவன், அவன் அருளில் வந்தான் - அந்த அருகக் கடவுளுடைய அருளினால் தோன்றினான், அக்கொற்றவன் - அந்த |