பக்கம் : 397
 

கிடந்தன, பொழில் அணிந்து எழுந்தவல்லி - பொழில்களை அழகு படுத்திக்கொண்டு
எழுந்தன்மையையுடையவான கொடிகள், புதைந்தன - அவன் உடலிலே
நெருங்கிப்படர்ந்தன, குழல் அணிந்து எழுந்த குஞ்சி - அவ்வரசனுடைய குழற்சியைப்
பொருந்தி எழுந்த மயிர்தொகுதியை, குருவிக்கூட்டம் குடைந்தன - சிறு பறவைகளின்
கூட்டம் தமது கூடாகக்கொண்டு குடையலாயின, (எ - று.)

தவநிலையில் அமர்ந்துள்ள வாகுவலி மன்னனுடைய அடிகளிற் புற்றுண்டாகிப் பாம்புகள்
சுற்றின. அவனுடைய உடல்மீது கொடிகள் படர்ந்தன. அவனுடைய தலைமயிரைக் குருவிக்
கூட்டம் கூடாகக் கொள்ளலாயின. பூமிநாதன் என்னுஞ்சொல் மேலும்கீழும் சென்று
பொருள் தருமாறு நடுநிலையாய் அமைந்துநின்றது. இதனை மத்திம தீபம் என்ப.

( 125 )

556. அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்ததோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணின்ற திறமிது தெரிய லாமோ.
 

     (இ - ள்.) அருமுடி அரசர் தாழ்ந்த அடிமிசை - பெறற்கரிய முடிக்கலன் அணிந்த
மன்னர் பலர் வணங்கப்பெற்ற தம் திருவடிகளின் மேலே, அரவம் ஊர - பாம்புகள்
ஊர்ந்து செல்லவும், வடிகரு நெடுங்கண் நல்லார் - மாவடுவின் பிளவினை ஒத்த கரிய
நெடிய கண்களையுடைய காதல் மகளிர்கள், கலந்த தோள் - பொருந்தித் தழுவிய தமது
தோள்களை, வல்லிபுல்ல - காட்டுக்கொடிகள் படர்ந்து தழுவவும், மருஉடை உலகம் பாடல்
- தம்பால் மருவுதலுடைய சான்றோர்கள் தம்மைப் பாராட்டிப் புகழ்ந்து பாடும் பாடலுக்கு
மாறாக, வனத்திடைப் பறவை பாட - இப்பொழுது அக்காட்டிலுள்ள பறவைகள் சூழ்ந்து
பாடவும், திருவுடையடிகள் - மேன்மையுடைய அவ்வாகுவலியடிகளார், நின்ற திறமிது -
தவத்திலே நிலைத்து நின்ற பெருமையினை, தெரியலாமோ - எம்மனோர் அறிந்துரைக்க
வியலுமோ (இயலாதென்றபடி), (எ - று.)

வடி - மாம்பிஞ்சு. வல்லி - கொடிகள், மருவுடைய - தம்பால் மருவுதலுடைய. உலகம் -
சான்றோர். பாடும் பாடல் என்க. அடிகள் : வாகுவலி.

( 126 )

557. வண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரி 1மதுத் துவலை மாரி.
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்.
 

(பாடம்) 1. மதத்.