பவச்சுதனானவன் முற்கூறியவாறு கூறுதலும், எல்லார்களும் - அங்கிருந்தவர்களனைவரும், அன்னதே என்று - அவ்வாறே செய்யத்தக்கது என்று, ஒட்டினார் - உடன்பட்டார்கள், (எ - று.) பவச்சுதன் பகர்ந்தவைகளைக் கேட்டு மற்றைய அமைச்சர்கள் உடன்பட்டனர் என்க. |
( 93 ) |
சுதசாகரன் என்பவன் சொல்லுதல் |
332. | அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும் வல்லி யாங்கணி சாந்து 1ம் வனைந்துராய் மல்லி னான்மலி 2மார்பற்கு மற்றிவை சொல்லி னான்சுத சாகர னென்பவே. |
(இ - ள்.) அல்லி நாண்மலர் தாரும் - அகவிதழ்களையுடைய அன்றலர்ந்த மலர்மாலையும், முத்தாரமும் - முத்து மாலையையும், வல்லி ஆங்கு அணிசாந்தும் வனைந்து - கொடியாக அங்கு எழுதப்படுகின்ற சந்தனத்தையும் அணிந்து, உராய் மல்லினால் மலி மார்பற்கு - மோதுகின்ற மற்போரிலே சிறந்து விளங்குகிற மார்பையுடைய சடியரசனுக்கு, இவை - மேற் கூறப்போகும் மொழிகளை, சுதசாகரன்-சுகசாகரன் என்னும் பெயரினை யுடைய அமைச்சன், சொல்லினான் - சொல்லத் தொடங்கினான், (எ - று.) சுதசாகரன் என்னும் அமைச்சன் தன் எண்ணங்களை வெளியிடுகிறான். ஆங்கு - அசையுமாம். என்ப : அசை. |
( 94 ) |
பவச்சுதன் கூறியது உண்மை என்றல் |
333. | ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல் பாழி யாகின்ற திண்டோட் பவச்சுதன் சூழி யானையி னாய் 3சொலப் பட்டன ஊழி யாருரை 4யும்மொத் துளகண்டாய். |
(இ - ள்.) சூழி யானையினாய் - முகபடாத்தை யணிந்த யானையை யுடையவனே! ஆழி ஆள்கின்ற அச்சுவகண்டன் மேல் - ஆணையுருளை யைச் செலுத்துகின்ற அச்சுவகண்டன் மீது, பாழி ஆகின்ற திண்தோள் |
|
(பாடம்) 1. மணிந்துராய். 2. மார்வற்கு. 3. சொல்லப்பட்டன. |