பக்கம் : 405
 

நீ மிகுந்த அறிவாளியாகலின் என் கருத்தை நன்கு அறிந்துள்ளாய்; ஆகவே என்
மனக்கருத்து உனக்கு நன்கு விளங்கும். ஆகவே நான் சுவலனசடி யரசனுக்குச்
சொல்லவேண்டிய செய்தியை நீயே உணர்ந்து சொல்லலாம். உன்னை முன்னால்
வைத்துக்கொண்டு நான் யாதுஞ் சொல்லவேண்டியதில்லை என்று முதலிரண்டடிகளால்
குறிப்பிட்ட மன்னவன், பின்னிரண்டடிகளால் நான் அந்த விஞ்சைமன்னனுடைய குறிப்பின்
வழியே நடந்து கொள்வேன் என்கிறான். மன்னும் ஓவும் ஈற்றசைகள்.

( 138 )

571.

கொற்றவன் 1குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
உற்றதோர் 2சிறுகுற் றேவற் 3குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கள் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
4மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்.

     (இ - ள்.) அற்றைநாள் - அன்றைக்கு, அங்கு தாழ்ப்பித்து - அந்த நகரத்தில்
தங்குமாறு செய்து, உற்றவன் உவப்பக்கூறி - தூதாகவந்த மருசியானவன் மனம்
மகிழும்படியான மொழிகளைக்கூறி, அகன்நகர் செல்வம் தன்னோடு - பரந்த நகரினுள்ளே
இருக்கின்ற செல்வச் சிறப்புடனே, உரிமை நாடகங்கள் காட்டி - நல்ல நாடகங்களை
ஆடுமாறுசெய்து அதனையும் மருசிக்குக் காட்டி, பிற்றைநாள் - மறுநாள், குரவர் தம்மை -
தன்னிடமுள்ள பெரியவர்களைப் பார்த்து, பின் சென்று விடுமின் என்று - பின்னே சென்று
வழிவிட்டு வருவீர்களாக என்று, அவர்க்கு அருளிச் செய்தான் - அந்தப் பெரியவர்கட்குக்
கூறினான். மருசியும் தொழுது

( 140 )


(பாடம்) 1. சோதிசேர். 2. தக்ககாச் செல்வம். 3. மற்றவனருளிச் செய்தான், என்பன பாடபேதங்கள், தக்ககாச் செல்வம். கற்பக தருவைப்போன்ற செல்வம்.