பக்கம் : 413 | | | 582. | தண்ணி ழற்சுடர்த் 1தமனி யத்தினான் மண்ணி ழற்கொள மருங்கு சுற்றிய வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங் கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும். | (இ - ள்.) தண் நிழல் சுடர் - குளிர்ந்த ஒளியை வீசுகின்ற, தமனியத்தினால் - பொற்குழம்பு பூசப்பட்டமையால், மண் - நிலம், நிழல் கொள - ஒளியை எய்தவும், மருங்கு - பக்கங்களில், சுற்றிய - சூழ்ந்துள்ள, வெண்நிழல் சுடர் விளங்கு கல்தலம் - வெண்ணிற ஒளிக்கற்றைகள் திகழ்ந்து விளங்கும் சிலாதலத்தை கண் - கண்ணாகிய பொறி, நிழல் கொள - குளிர, கண்ட காட்சியும் - தான்கண்ட காட்சிகளும், (எ - று.) சிலாதலத்தின் அடிப்பகுதியில் பொன் பூசப்பட்டுண்மையால் மண் ஒளியெய்திற் றென்க. வெண்ணிழல் - சிலாதலத்தின் ஒளி, குளிர்ந்த ஒளியைக் காலும் பொன்னால் அழகுறுத்தப்பட்டு விளங்கும் கற்றலம் என்க. | ( 10 ) | | 583. | சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன் எரிந்த பூணின னிலங்கு தாரினன் வரிந்த கச்சைய னொருவன் வந்துவண் டிரிந்து பாயவிங் கேறு கென்றதும். | (இ - ள்.) சுரிந்த குஞ்சியன் - சுருண்ட தலைமயிரையுடையவனும், சுடரும் மேனியன் - ஒளிரும் உடல்படைத்தவனும், எரிந்த பூணினன் - ஒளிவீசும் அணிகளை அணிந்தவனும், இலங்கு தாரினன் - விளங்குகின்ற மலர்மாலையை அணிந்தவனும், வரிந்த கச்சையன் - வரிந்துகட்டிய கச்சையை உடையவனும் ஆகிய, ஒருவன் வந்து - (துருமகாந்தன் என்னும் பெயரையுடைய காவலன்) ஒருவன் தன்பால்வந்து, வண்டு - சிலாதலத்தின் மொய்க்கும் வண்டுகள், இரிந்துபாய - அகன்று ஓடுமாறு, இங்கு - இச்சிலாதலத்தின்மிசை, ஏறுக என்றதும் - நீ ஏறி அமர்வாயாக என்று முகமன் மொழிந்ததும், (எ - று.) குஞ்சியனும், மேனியனும், பூணினனும், தாரினனும், கச்சையனுமாகிய ஒருவன் என்க. மரீசியைப் புட்பமாகரண்டத்தே எதிர்கொண்டு போற்றிய துரும காந்தனை என்க. | ( 11 ) |
| (பாடம்) 1. தபனி. | | |
|
|