பக்கம் : 414 | | | 584. | மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங் கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர் உற்ற மங்கலக் கலங்க ளோடுடன் முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும். | (இ - ள்.) மற்றவன் - அங்ஙனம் முகமன் மொழிந்த துருமகாந்தன், தனக்கு - தன்பால், உரைத்த மாற்றமும் - கூறியமொழிகளும், கொற்றவன் - பயாபதிவேந்தன், விட - ஏவாநிற்ப, கொம்பனார் சிலர் - பூங்கொம்பை ஒத்த அழகிய மகளிர்கள் சிலர், உற்ற - பொருந்திய, மங்கலக் கலங்களோடு - மங்கலப் பொருள்களோடு, உடன்முற்ற - ஒருங்கே வந்து தன்னைச் சூழ்தலானே, ஊண் தொழில் - பின்னர் உண்ணும் தொழில், முடிந்த - முற்றிய, பெற்றியும் - தன்மையும், (எ - று.) ஏறுக!, என்று கூறிய துருமகாந்தன் தனக்குக்கூறிய உரைகளும், பயாபதி மன்னன் பணியால் மகளிர்கள் வந்து மங்கலக் கலங்களைக் கொண்டுவந்து தன்னை உண்ணச் செய்த பெருமையும் (கூறினான் என்க). | ( 12 ) | | 585. | 1பங்க யத்தலர்ச் செங்கண் மாமுடித் திங்கள் வண்ணனுஞ் செம்போ னீள்குழைப் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும் அங்கு வந்தது மவர்கள் சொற்றதும். | (இ - ள்.) பங்கயத்து அலர் செங்கண் - செந்தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையும், மாமுடி - சிறந்த முடியையும் உடைய, திங்கள் வண்ணனும் - திங்களைப்போன்ற வெண்ணிறம் படைத்த விசயனும், செம்பொன் நீள்குழை - செந்நிறப் பொன்னாலாகிய நீண்ட குண்டலங்களை அணிந்தவனும், பொங்கு வெண் திரை புணரி வண்ணனும் - பொங்குகின்ற வெள்ளிய அலைகளை எறியும் கடலின் நிறத்தை உடையவனுமாகிய திவிட்டனும், அங்கு வந்ததும் - அவ்விடத்தை அடைந்த செய்யும், அவர்கள் -அவ்விசய திவிட்டர்கள், சொற்றதும்-தனக்குச் சொன்ன மொழிகளும், (எ-று.) திங்கள் வண்ணனும், புணரி வண்ணனும் அப் பொழிலிடத்தே வந்து தன்னைக் கண்டு கூறிய முகமன் மொழிகளையும், (கூறினான் என்க.), | ( 13 ) | | |
|
|