பக்கம் : 424
 

     (இ - ள்.) மன்ன - அரசே!, சங்கவண்ணனார் - சங்கைப் போல வெள்ளைநிறம்
பொருந்திய விசயனுடைய, தம்பிதானும் - தம்பியாகிய, நீர் பொங்கு கார்முகில் புரையும்
மேனியன் - நீர்மிக்க கரியமேகத்தின் நிறத்தை ஒத்த நிறமுடைய திவிட்டன் என்பான்,
அங்கண் இவ்வுலகு ஆள - அழகிய இடமமைந்த இந்த உலக முழுதையும் ஆளும்
அரசர்கள் நெறியறிந்து ஆளுதற்கு, நாட்டிய - இறைவனால் நிலைநிறுத்தி வைக்கப்பட்ட,
மங்கலப்பொறி - நன்மை மிக்க ஓர் அடையாளம் ஆவன், காண்டியால் - என்று
அறிவாயாக, (எ - று.)
    
     ஏனைய மன்னர்கள் இவனைப் போன்று ஆள்க என்பதற்கு அடையாளமாகத்
திவிட்டனை இறைவன் படைத்து நாட்டினன் என்க.

     இனி மேனியன் இவ்வுலகு ஆள்வதள்கு அறிகுறியாக இறைவன் அவன் மேனியில்
நாட்டியுள்ள உத்தம விலக்கணங்களையும் நோக்குக! என்று இயம்பினும் அமையும்.
 

( 30 )

 

603.

செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்
பங்க யத்துமேற் பாவை தன்னுட
னங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே.
 

     (இ - ள்.) நங்குலக்கொடி நங்கை - நம்முடைய குலத்தின் கட்டோன்றிய பூங்கொடி
போல்வாளாகிய சுயம்பிரபை, செங்கண் மாலவன் தெய்வ மார்பகம் - சிவந்த
கண்களையுடைய திருமாலாகிய திவிட்டனுடைய தெய்வத்தன்மை பொருந்திய
மார்பினிடத்தே, பங்கயத்துமேல் பாவை தன்னுடன் - செந்தாமரை மலரின்மேல் வதியும்
திருமகளோடு (முன்னரே சேர்ந்துளாளாகலின்), சேர்வதற்கு - சேர்ந்துவதிவதற்கு, இங்கன் -
இவ்வுலகத்தே, எவன்கொல் மாதவம் செய்ததே - எத்தகைய பெருந்தவம் நோற்றனளோ! (எ - று.)

     பெறற் கரிய பேறு தவத்தானன்றிப் பெறலாகா தாகலின் செங்கண் மாலாகிய
திவிட்டற்குத் தேவியாக நம் சுயம்பிரபை நல்லான் மிகப் பெரிய தவம் நோற்றாளாதல்
வேண்டும் என்றான். உரிமைபற்றி நங்குலக்கொடி என்றான் என்க.
 

( 31 )

மரீசி திவிட்டனுக்கும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
604.

நங்கை 1யங்கவ னலத்திற் கொப்பவ
ளிங் 2கி வட்குவே றேந்த லில்லிவர்
பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது
வெங்கண் யானையாய் வியக்கு நீரதே.  

     

 

     (பாடம்) 1. மற்றவற் கல்ல தொப்பிலள். 2. வட் கலா வேந்தக்கில்லவன்.