பக்கம் : 427 | | இதுவுமது | 608. | ஆத லா 1லஃ தறியும் வாயிலா வோது மாண்பினா னொருவ னொற்றனாய்த் தீதி றனையாய் செல்ல 2வைப்பதே நீதி 3யாமென நிகழ்த்தி னாரரோ. | (இ - ள்.) ஆதலால் - சதவிந்து அங்ஙனம் கூறியுள்ளபடியால், தீதுஇல் தானையாய் - குற்றமில்லாத படைமன்னனே!, அஃதறியும் வாயிலா - அந்நிகழ்ச்சியை அறிந்துகொள்ளுமாறு, ஓதுமாண்பினான் ஒருவன் - ஒற்றற் கோதிய மாண்புகள் அனைத்தும் அமைந்த ஒருவனை, ஒற்றனாய்ச் செல்லவைப்பதே நீதி ஆம் - ஒற்றனாகப் போக்குவதே நியாயமாக எமக்குத் தோன்றுகின்றது, என நிகழ்த்தினார் - என்று கூறினார், அரோ : அசை, ( ) ஆதலால் அவ்வாறு நிகழ்வதனை அறியும் பொருட்டு ஓர் ஒற்றனை யாம் போதனத்தே போக விடுதலே நன்றென்று யாம் கருதுகின்றறோம் என்றார் என்க. எல்லா அமைச்சருடைய கருத்துமிதுவே ஆகலின் என்றார் எனப் பன்மைப்பாலாற் கூறினார். | ( 36 ) | மன்னன் ஒற்றாய்தல் | 609. | உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல் வைத்த வொற்றினன் மன்ன னானபி னத்தி 4றத்தினே யமர்ந்த சிந்தைய னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான். | (இ - ள்.) மன்னன் - சடிவேந்தன், அவர் உய்த்து உணர்ந்து உரைத்த - அவ்வமைச்சர்கள் ஆராய்ந்து அறிந்து கூறிய, நீதிமேல் - நீதியை மேற்கொண்டு, வைத்த ஒற்றினன் ஆனபின் - அச்செயல்மேல் வைக்கப்பட்ட ஒற்றனை உடையானாய பிறகு, அத்திறத்தினே அமர்ந்த சிந்தையன் - அத்துணையானே அமைதியை அடைந்த உள்ளத்தை உடையவனாய், ஒத்த சுற்றமொடு உவகை எய்தினான் - மனம் ஒத்த சுற்றத்தார்களோடு அளவளாய் மகிழ்ச்சியடைந்தான், (எ - று.) | |
| (பாடம்) 1. லவற் கறியும். 2. வைப்பதா. 3. நீதியாவது நீடு தோளினாய். 4. றத்தினை. | | |
|
|