அப்போது ஆராய்ந்த காரியத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்ட பின்னர் அக்காரியத்தைப்பற்றி மேலும் மேலும் வீணே சிந்தித்துழலாமல் அத்துணையானே அமைந்து மகிழ்தல் சான்றோரியல்பு ஆதலின், “அத்திறத்தினே அமர்ந்த சிந்தையன்“ என்றார். இனி அச்செயலிலே வைத்த கருத்துடையனாய் எனினுமாம். அமைச்சர்கள் ஆராய்ந்துரைத்தபடி அரசன் ஓரொற்றனைப் போதனத்திற்குய்த்து அமைதியுடனிருந்தான் என்க. |
( 37 ) |
இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல் வேறு |
610. | இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா ளத்தி சைக்கணஞ் சப்படு 1மாழியா னெத்தி சைக்கும்வெய் 2யோனியன் 3முன்னுற வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம். |
(இ - ள்.) இத்திசைக்கண் - இந்தத்தென்றிசைச்சேடியில்; இது இவ்வாறு செல்லு நாள் - இந்நிகழ்ச்சி ஈண்டுக் கூறியவாறு நிகழ்கின்ற நாளில், அத்திசைக்கண் - அந்த வட சேடியின் கண் உள்ள, அஞ்சப்படும் ஆழியான் - எத்திறத்தாரும் அஞ்சுதற்கு ஏதுவாகிய ஆணை உருளையை உருட்டுபவனும், எத்திசைக்கும் வெய்யோன் - எல்லாத் திசைகளிலும் வாழும் எல்லோருக்கும் தீயவனும் ஆகிய அச்சுவகண்டன் என்பானுடைய, இயல் முன்னுற வைத்து இசைத்தனம் - இயல்பினை முன்னரே அச்சுவன் கூற்றாக வைத்து ஒரு சிறிது கூறினோம், மற்றதும் கூறுவாம் - இனி அவனியல்பினில் எஞ்சியதையும் ஈண்டு இயம்புவோம், (எ - று.) இது புலவர் கூற்று. அச்சுவகண்டன் இயல்பு மந்திரசாலைச் சருக்கத்தில் 40 ஆம் செய்யுள் தொடங்கி 69 ஆம் செய்யுள் முடியவரும் சுதசாகரன் கூற்றில் காண்க. |
( 38 ) |
இதுமுதல் 9 செய்யுள்கள், அச்சுவகண்டன் காமக்களியாட்டம் கூறுவன |
611. | பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா மஞ்சு தோய்வரை மார்ப 4மடுத்துழத் துஞ்ச லோவுந் தொழிலின னாயினான். |
(இ - ள்.) பஞ்சிமேன் மிதிக்கிற் பனிக்கும் தகை - பஞ்சுக் குவியலை மிதித்தாலும் பொறாது நடுங்கும் மெல்லடியராந் தன்மையுடைய, அம்சில் ஓதியர் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர்கள், அம்முலை நாஞ்சிலா - தம் அழகிய முலைகளைக் கலப்பையாகக்கொண்டு, மஞ்சுதோய்வரை மார்பம் - முகில்படியும் மலையை ஒத்த |
|
|
(பாடம்) 1. ஆழியாண். 2. யோன்றிறம். 3. முன் னெலாம். 4. மடுத் துழாத். |