பக்கம் : 429
 

     அச்சுவகண்டனுடைய மார்பகத்தை வயலாக வைத்து, மடுத்துஉழ - நன்கு
உழுதலாலே, துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான் - உறக்கம் ஒழித்து
அக்காமத்தொழில் ஒன்றிலேயே மிக்கவன் ஆனான்.
ஆண்டுப் பயாபதி “காவல் ஓவுங்கொல் என்று கண்படான்“ என்றதை - ஈண்டு
அச்சுவகண்டன் துஞ்சலோவும் தொழிலினன் ஆயினான், என்பதனோடு வைத்து ஆராய்க,
(எ - று.)
     மிதிக்கினும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது.
     “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
     அடிக்கு நெருஞ்சிப் பழம்“
    
     என்றார் திருவள்ளுவரும். அம்முலை நாஞ்சிலா என்றமையால் மார்பாகிய வயல்
என்று கூறுக. அச்சுவ கண்டன் கழி காமமுடையனாய் அத்தொழிலிலே மிக்கான் என்க.
 

( 39 )

 

612.

முத்த வாணகை 1மொய்பவ ளத்துணி
யொத்த வாயமு 2தொண்கடி கைத்திரள்
வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
சித்த வாரிக ளுட்சென்று தங்கினான்.
 

     (இ - ள்.) முத்தம் வாள்நகை - முத்துக்களைப்போன்று ஒளியையுடைய பற்களோடு
கூடிய; மொய் பவளம் துணி ஒத்தவாய் அமுது - திண்ணிய பவளத்துணுக்கை ஒத்த வாயில்
ஊறும் அமுதத்தை உண்ணும் பொருட்டு, ஒண்கடிகைத்திரள் வைத்த வாயினனாய் -
ஒளிபொருந்திய அதரங்களாகிய திரட்சியுடைய உண்கலங்களிற் பொருந்தவைத்த வாயை
உடையவனாய், மடவார்கள் தம் - அவ்விள மகளிர்களுடைய, சித்தவாரிகளுள் சென்று
தங்கினான் - உள்ளமாகிய கடல்களிலே வீழ்ந்து முழுகிக்கிடந்தான், (எ - று.)
மகளிர் பலர் என்பது தோன்ற, சித்தவாரிகள் என்றார். கடிகை - கலம். தங்கினான் -
அழுந்தினான். அச்சுவகண்டன் மகளிர் அதரத்தே வைத்த வாயினனாய் அவர்தம்
மனக்கடலுள் ஆழ்ந்தான் என்க. மகளிர் அவனைக் கரையேற விடாமல் தம் மனப்படியே
தம் மின்பத்தே மூழ்கிக் கிடக்கச் செய்தலின் அவர் மனத்தைக் கடல் என்றார்.
 

( 40 )

இதுமுதல் 9 செய்யுள்கள்,
அச்சுவகண்டன் காமக்களியாட்டம் கூறுவன

613.

ஆரந் தங்கிய மார்பனு 3மந்தளிர்க்
4காருங் கொம்பனை யாருங் கலந்துழித்
 
 

     

 

     (பாடம்) 1. சூழ்பவயத்திரள். 2. தக்கடி. 3. மாந்தளிர்க், 4. காருண்.