பக்கம் : 43
 

செல்வச் சிறப்பு

48. கண்ணிலாங் கடிமலர்க் குவளைக் கற்றையும்;
1வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்;
2வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
3அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.
 
     (இ - ள்.) கள்நிலாம் - தேன் நிலவாநின்ற; கடி குவளை மலர் கற்றையும் -
மணம்பொருந்திய குவளை மலர்களின் தொகுதியும்; வெண்நிலாத்திரள் என விளங்கும்
ஆரமும் - வெண்மையான திங்கள் ஒளியின் கூட்டம் என்று சொல்லும்படியாக மிளிரும்
முத்துமாலைகளும்; வண்ணம் வால் மல்லிகைவளாய மாலையும் - அழகிய
வெண்ணிறமுடைய மல்லிகை மலர்கள் விரவிய மலர்மாலைகளும்; அண்ணல் மா நகர்
கவைக்கு - பெருமைபொருந்திய சிறந்த அந்த நகரத்திலமைந்த முச்சந்தி முதலிய கவர்
வழிகட்கு: அரிய அல்ல - அரும்பொருள்களல்ல; அவை யாண்டும் மிகுந்து கிடக்கும்
எண்பொருள்களே. (எ - று.)

     நகரத்தின் கண் அமைந்த கவர்வழிகளிலெல்லாம் குவளைமலர்த் தொகுதியும்
முத்துமாலைகளும், மல்லிகை மலர்களைக் கலந்து கட்டப்பெற்ற மாலைகளும் மிகுதியாகக்
குவிந்துகிடக்கின்றன வென்க. இவ்வாறு செல்வமிகுதியைக் கூறுதலை அணி நூலார்
வீறுகோளணி என்பர். மாலைகளை எறிந்துள்ளமைக்குக் காரணம் பழையனவாய்க்
கழிக்கப்பட்டவை யென்றோ ஊடலால் வீசப்பட்டவை யென்றோ கொள்க.
அந்நகரத்திலுள்ளார் யாவரும் செல்வச் சிறப்புடையராதலின் எறியப்பெற்றவைகளை
எடுப்பார்களும் இலராயினர். அண்ணல் பயாபதி மன்னன் எனினும் ஆம். கவை : கிளைகளாய்ப் பிரியும் முச்சந்தி நாற்சந்தி முதலிய வழிகள். கவைக்கு : உருபுமயக்கம்.

( 13 )

மாளிகைகளில் உணவுப்பொருட்களின் மிகுதி

49. தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
4மாம்பழக் குவைகளு மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.
 

     (பாடம்) 1. வெண்ணிலாத்திறள், 2. வண்ணமான், 3. மன்னன் மாநகர், 4. மாம்பழக் கனிகளும்.