பக்கம் : 430 | | | | தாருங் கொங்கைக ளும்பொரத் தாஞ்சில வாரம் பட்டணி வண்டின மார்த்தவே. | (இ - ள்.) ஆரம் தங்கிய மார்பனும் - முத்துமாலை கிடந்து புரளும் மார்பினையுடைய அச்சுவகண்டனும், அந்தளிர்க்கு ஆரும் கொம்பு அனையாரும் - அழகிய மாந்தளிரை ஒத்த மேனியுடைய பூங்கொடிபோலும் மடவாரும், கலந்துழி - கலவி நிகழ்த்தியபொழுது, தாரும் கொங்கைகளும் பொர - அச்சுவகண்டன் மார்பகத்தனவாகிய மாலைகளும், மகளிர் கொங்கை களும் தம்முள் மோதிப் போர்புரிய, அணிவண்டினம் தாம் சில - அழகிய அளிக்குலங்கள் சில, வாரம்பட்டு ஆர்த்தவே!, - நியாயம் இழந்து ஆரவாரம் செய்தன, (எ - று.) நியாயம் இழத்தலாவது : வண்டினங்களுக்குரிய மலர்களையும் அவற்றிலுள்ள தேனையும் இழக்கும்படி அவற்றை இரியச் செய்தல். வாரம் - பக்ஷபாதம். வாரம் சொன்னான் மனை என்பதனாலிதனை யறிக. இரண்டு பகைவர் பொருதும்போது நொதுமல் ஆகிய வண்டுகள் உண்டியுறையுள் இழத்தல் நியாய மல்லாமை காண்க. இதன்கண் புணர்ச்சி கூறப்பட்டது. | ( 41 ) | | 614. | வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட் கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ துண்டு மற்றவ 1ரொண்டுவர் வாயொளித் தொண்டை 2யங்கனி யின்சுவை யெய்தினான். | (இ - ள்.) கொம்பனையார்கள் - பூங்கொம்பு போன்ற இளமகளிர்கள், வள்ளத்தினுள் - பொற்கிண்ணத்தில், வண்டுதோய் மதுவாக்கிக்கொண்டு - அளிகள்மொய்க்கும் கள்ளைப்பெய்து நிறைத்துக்கொண்டு வந்து, கொடுப்ப அஃதுண்டு - கொடுக்க அக்கள்ளை நிறையக்குடித்து, மற்றவர் - மேலும் அவ்விள மகளிர்களின், ஒண்துவர்வாய் - ஒள்ளிய பவளவாயின் கண்ணதாகிய, ஒளித்தொண்டையங்கனி இன்சுவை எய்தினான் - ஒளியை யுடைய தொண்டைக்கனியை ஒத்த அதரங்களின் ஊறலாகிய இனிய சுவையையும் நுகர்வானாயினான், (எ - று.) கள்ளும் காமமும் இடையறாது நுகர்ந்தான் என்பதாம். தொண்டைக் கனி - கொவ்வைக் கனி. | ( 42 ) | 615. | தாம மென்குழ லார்தடங் கண்ணெனுத் தேம யங்கிய செங்கழு நீரணி காம மென்பதொர் கள்ளது வுண்டரோ யாம மும்பக லும்மயர் வெய்தினான் |
| (பாடம்) 1. ர்தந்துவர். 2. யங்களி. | | |
|
|