பக்கம் : 436 | | (இ - ள்.) தன்னை வென்ற தார்வய வேந்தனை - உட்பகையாய அறுவகைக் குற்றங்களையும் வென்று மேம்பாடுற்று வாகைசூடிய வலிமைமிக்க அரசனை, பிறர்க்குப் பின்னை வேறல் அரிது - பிற பகை மன்னர்களுக்குப் பிறகு வெல்லுதல் இயலாதாம், ஆதலால் - அங்ஙனம் ஆதலால், மற்றவன் ஆளும் வரைப்பகம் - தன்னை வென்ற அம்மன்னவன் ஆளும் நாட்டின்கண், நன்று பொன்னி்ன் மாரிபொழந்திடும் - நன்கனம் பொன்மழை பொழிந்து வளம் செய்யும், (எ - று.) பொன்மழை பொழியும் என்றது செல்வங்கொழிக்கும் என்றபடி, இனி, பருவப்புயல் தவறாமற் பெய்யின் செல்வம் மிகும் ஆதலின் அப்புயலைப் பொன்மழை என்றார் எனினும் பொருந்தும். உட்பகை களைந்த உரவோரை நட்போரன்றிப் பகைப்போரின்மையின் ஒரோவழி ஒரு சிலர் உளராயவழியும் அவரை வேறல் அரிதாயிற்று. பிறக்கு என்பது பாடமாயின் அசையாக்கிப் பகைவர்க்கென வருவித்துரைத்துக் கொள்க. | ( 52 ) | அரசர்க்குரிய அறுவகைப பகைகள் | 625. | மாசி றண்டன்ன தோண் மன்ன மன்னிய கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ னேசி றண்டம் பரவவிவ் வையக மாசி றண்டத்த னாயினி தாளுமே. | (இ - ள்.) மாசுஇல் வண்டு அன்னதோள் மன்ன - குற்றமற்ற தூண்போன்ற தோளையுடைய வேந்தே!, கொற்றவன் - ஓரரசன், மன்னிய கோசுஇல் தண்டத்தன் ஆய்விடின் - தன்பால் நிலைபெற்ற (அறுவகைக்) குற்றங்கள் இல்லாத செங்கோலனாகிவிட்டால், ஏசு இறு அண்டம் பரவ - குற்றந்தீர்ந்த வானவருலகம் தன்னைப்புகழும்படி, ஆசு இல் தண்டத்தனாய் - குற்றமில்லாத படைப்பெருக்கமும் உடையனாய், இவ்வையகம் இனிது ஆளும் - இவ்வுலகத்தை இனிதாக ஆளாநிற்பன், (எ - று.) தண்டு - தூண். கோச - குற்றம். ஏசு - குற்றம், மாசு - குற்றம். ஆசு - குற்றம். ஏசு இறு அண்டம் என்றது வானவருலகத்தை. கொற்றவன் உட்பகை களைந்து செங்கோலனாகிவிடின் அவனை அமரர் வாழ்த்துவர். அவனுடைய படைஞரும் நல்லர் ஆகுவர், உலகம் அவன் அடிதழுவி இனிது வாழும் என்றவாறு. இச்செய்யுள் சில ஏட்டுச் பிரதிகளில் இல்லை. | ( 53 ) | | 626. | பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ் சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென் றுற்ற வான்பொருள் 1காத்துய ரீகையுங் 2கற்ற வன்பிறர் காவல னாகுவான். | | |
| (பாடம்) 1. காத்திருந்தீகையும்; காத்தறிந். 2. கற்றவன் பிற கற்றவன்பிற். | | |
|
|