பக்கம் : 437 | | (இ - ள்.) காவலன் ஆகுவான் - காத்தற்றொழிலில் வல்லவன் என்று பாராட்டப்படும் அரசன் யாவன் எனின்? பெற்ற - தான் ஊழானாதல் தாயத்தானாதல் பெற்றுள்ள செல்வங்களையே, தன் முதலா - தனக்குரிய முதலாக வைத்து பின் - பின்னர், பெறாததும் - தான் பெறாத செல்வமும், சுற்றி வந்து அடையும்படி - அதர்வினாய்த் தன்னைச் சூழ்ந்து வந்து பொருந்தும்படி, சூழ்ந்து - வினைவகைகளை ஆராய்ந்து, சென்று - ஆராய்ந்து துணிந்த அந்நெறியிலே முயன்று, உள்ள வான் பொருள் - அம்முயற்சியாலே தன்பால்வந்துற்ற சிறந்த பொருளை, காத்து - நன்குபேணிக் கொண்டு, உயர் ஈகையும் கற்றவன் - மேலும்தான் உயர்தற்குக் காரணமான ஈதற்றொழிலையும் நன்க கற்றவனே ஆவான், (எ - று.) அரசர் என்பான் பெற்ற பொருள் முதலாகப் பெறாதனவும் வந்து சுற்றப் பொருள்காத்து ஈயும்வழி ஈதலும் செய்வானே ஆவான் என்க. “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு“ (திருக். 385) என்னும் பொய்யாமொழியின் பொருளெல்லாம் இதனுட் போந்தமை காண்க. | ( 54 ) | | 627. | அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த் திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை செருக்கெ னப்படுந் திண்பனி விழுமேல் முருக்கு மற்றத 1னைமுகத் தாரினாய். | (இ - ள்.) தன் அறிவு அருக்கனாக - தன்னுடைய மெய்யறிவே கதிரவனாக, திரு அலர்ந்த நீர் (ஆக) - மன்னர்க்குச் சிறந்துரிமையுடைய திரு எனப்படும் மன்னறமே விரிந்த நீராக, கவின்ற செல்வச் செழுந்தாமரை - அந்நீருள் தோன்றிய அழகிதாகிய செல்வம் என்னும் செழிப்புமிக்க தாமரைமலர், செருக்கெனப்படும் திண்பனி வீழுமேல் - மன்னனுடைய மதக்களிப்பாகிய செறிந்த பனி பெய்யப்பெறுமாயின், முகத்தாரினாய் மற்றதனை முருக்கும் - முகப்புவேலை செய்தமைத்த மாலையை அணிந்த மன்னனே அச் செல்வமாகிய தாமரையை அப்பனி, கொன்றழிக்கும், (எ- று.) தன் அறிவு ஞாயிறாக அறமே நீராக அதன்கண் வளர்ந்த செல்வம் என்னும் தாமரைமலர், செருககுடைமையாகிய பனி பெய்ய அழிந்தொழியும் என்றான் என்க. | ( 55 ) |
| (பாடம்) 1. னைம்முகத். | | |
|
|