பக்கம் : 44 | | (இ - ள்.) தேம்பழுத்து - மணம் மிகுந்து; இனியநீர் மூன்றும் - இனிமையுள்ளனவான மூன்று வகை நீர்களும்; தீம்பலா - இனிய பலாமரங்களில்; மேம் பழுத்து அளிந்தன மேன்மையாகப் பழுத்து அளிந்தனவாகிய; சுளையும் - சுளைகளும்; வேரியும் - தேனும்; மா பழம் குவைகளும் - கனிந்து முதிர்ந்த மாம்பழங்களின் திரளும்; மதுதண்டு ஈட்டமும் - மதுப்பெய்யப்பெற்ற மூங்கில் குழாய்களின் தொகுதியும்; சில தவளமாடம் - சில வெள்ளிய மாடங்கள்; பழுத்துஉள - மிகுதியாகப் பெற்றுள்ளன. (எ - று.) தாம் - அசை. மூன்று இனியநீர்; கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்பவற்றைப் போட்டு உடல் நலத்திற்கு ஏற்றவாறு ஊறவைக்கப்பெற்றநீர். பனை நுங்கினீர் கருப்பஞ்சாறு இளநீர் என்னும் மூன்று நீருமாம். மணம் ஊட்டப்பெற்ற நீர், மோர், பானகம் எனினும் பொருந்தும். பழக்கனி - பழுத்ததோடன்றி முதிர்ந்து சிறந்தது. மதுத்தண்டு என்பதற்குக் கருப்பங்கழி என்றும் பொருள் கூறுவர். முன்னாளில் மதுவகைகளை வைத்தற்கு மூங்கிற் குழாய்களையே பயன்படுத்தினர். வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும் அழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையும் தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக் குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே. என்றவிடத்தில் ‘மதுப்பெய்த மூங்கிற் குழாய்’ என்றே நச்சினார்க்கினியர் உரை கூறினார். இது மருட்கையணி. | ( 14 ) | இன்ப உலகம் | 50. | மைந்தரு மகளிரு மாலை காலையென் றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால் சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக 1ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே. | (இ - ள்.) மைந்தரும் மகளிரும் - அந்நகரத்திலுள்ள இளைஞர்களும் மங்கையர்களும்; மாலை காலை என்று - இரவு என்றும் பகல் என்றும்; அந்தரப் படுத்தவர் - இடையறுத்து; அறிவது இன்மையால் - தெரிந்து கொள்வது இல்லாதபடியால்; சுந்தரம் பொன்துகள் - அழகிய பலவகை நறுமணப் பொடிகளால்; துதைந்த பொன்நகர் - நெருங்கப்பெற்ற அழகிய | | (பாடம்) 1. இந்திரருலகம். | | |
|
|