பக்கம் : 441
 

     (இ - ள்.) முத்த நீண்முடியாய் - முத்துமாலை சூட்டப்பெற்ற நீண்ட முடியுடைய
வேந்தே!, முன்னம் மற்றதற்கு ஒத்தவாறு உணர்ந்தீ!, என - அப்பகை மூள்வதற்கு
முன்னரே அதனை வெல்வதற்கேற்றதொரு வழியை நீ அறிந்து கடைப்பிடித்தருள்க என்று
நிமித்திகன் கூறினானாக, என் செய்யும்! மைத்தகை மனத்தான் மனித்தன் என -
அச்சுவகண்டன், ஆ, என்னை மைபோலும் இருள் மனத்து எளிய மானுடன் ஆகிய
அத்திவிட்டன் செய்யக்கிடந்த தென்னை! என்று கூறி, கைத்தலம் கதிர்வீச மறித்தனன் -
கைகளின் அணிகள் ஒளிக்கற்றை காலுமாறு தடுத்தான், (எ - று.)

     தான் விஞ்சையன் ஆகலின் மனித்தன் என இகழ்ந்து கூறினான். உணர்க என்னும்
முன்னிலை ஏவல் வினைக்கண் ஈ அந்நிலை மரபின் மெய்யூர்ந்து உணர்ந்தி என வந்தது.
 

( 61 )

அச்சுவகண்டன் கூறல்

634.

மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்
தொகையை வென்றவென் 1றோளுள வாப்பிற
பகையி னிப்படர்ந் தென்செயு மென்றன
னகைகொ ணீன்முடி நச்சர 2வம்மனான்.
 

     (இ - ள்.) நகைகொள் நீள்முடி நச்சரவம் அனான் - துலங்குகின்ற நிண்ட
முடியையுடைய விடப்பாம்பை ஒத்த அச்சுவகண்டன், மிகையின் வந்த விச்சாதரவேந்தர் தம்
தொகையை வென்ற - தங்களை வலிமுதலிய வற்றால் மிகைப்பட மதித்து எம்பால்
போர்க்கு வந்து எதிர்ந்த விச்சாதர மன்னர்களுடைய கூட்டத்தையும் பொருது வெற்றி
எய்திய, என் தோள் உளவா - என் தோள்கள் எனக்குத் துணையாக இருப்பவனாக,
பிற பகை இனிப் படர்ந்து என் செயும் - அவ்விச்சாதரர் அளவும் வலியற்ற வேறு
மானிடப்பகை எம்பால் வந்து எம்மை யாது செய்யவல்லும்?, என்றான் - என்று
எள்ளிக்கூறினான், (எ - று.)

     விச்சாதரரிற்றாழ்ந்த மானிடப்பகை என்பான் பிறபகை என்றான்.
 

( 62 )

அச்சுவகண்டனின் சினமொழிகள்
635.

மாசி லாலவட் டத்தெழு மாருதம்
வீச விண்டொடு மேருத் 3துளங்கமோ  

     

 

     (பாடம்) 1. வென்ற வென்றோர் துலங்கப். 2. வன்னான். வன்றான். 3. துளங்குமே.