|
| பேசின் மானிடப் பேதைக ளாற்றலா லாசி றோளிவை தாமசை வெய்துமோ. |
(இ - ள்.) மாசில் ஆலவட்டத்து எழும் மாருதம் வீச - அழுக்கில்லாத விசிறியால் எழுப்பப்பட்ட காற்று வீசுதலாலே. விண்தொடு மேரு துளங்குமோ! - விசும்பைத் தொடுகின்ற மேருமலை அசையுமோ!, பேசின் மானிடப்பேதைகள் ஆற்றலால் - ஆராய்ந்து கூறுங்கால், மனிதர்களாகிய அறிவிலிகளின் வலியால், ஆசில்தோள் இவைதாம் அசையுமோ - குற்றமற்ற என் தோள்களாகிய இவை அசைந்து விடுமோ!, (எ - று.) விசிறியா லெழுப்பப்படும் காற்றுத் திண்ணிய மேருவினை என்செய்யும் என்றான் என்க. இதனால் தன் பெருமைக்கும் அவர் சிறுமைக்கும் உவமை கூறினான். |
( 63 ) |
இதுவுமது |
636. | வேழத் தின்மருப் புத்தடம் 1வீறுவ வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ வாழித் தானவர் தானையை யட்டவென் பாழித் தோள்மனித் தர்க்குப் 2பணியுமோ. |
(இ - ள்.) தடம்வீறுவ வேழத்தின் மருப்பு - பெருமையாற் சிறப்புற்றன வாகிய யானையின் கொம்புகள், வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ - வாழையினது நொய்ய தண்டின் கண் குத்துதலாலே கூர்மழுங்கிவிடுமோ!, ஆழித்தானவர் தானையை அட்டஎன் பாழித்தோள் - கடல்போலத் திரண்டு வந்த வித்தியாதரர்களின் படைகளைக் கொன்று குவித்து நூழிலாட்டிய என் விரிந்த தோள்கள், மனித்தர்க்குப் பணியுமோ - எளிய மானிடர்க்கோ தாழ்வன! (எ - று.) யானையின் மருப்பு மெல்லிய வாழைத்தண்டில் ஊன்றுதலாலே மழுங்க மாட்டாததுபோன்று அப்பேதை மானிடரை வெல்வதனால் என் தோள்கட்கு ஒருதாழ்வுண்டாகாதென்றான் என்க. |
( 64 ) |
இதுவுமது |
637. | 3வேக மாருதம் வீசவிண் பாற்சிறு மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ வேக மாயவென் 4சீற்றமஞ் சாதெதி ராக 5மானுடர் தாமசை கிற்பவோ. |
|
(பாடம்) 1. குத்துவ. 2. பனிக்குமோ. 3. 636-637-ம் ஆகிய இவ்விரண்டு செய்யுளும் சில பிரதிகளில் முன்பின் மாறியுள்ளன 4. றிறமஞ். 5. மானுயர். |