பக்கம் : 451
 

     தீதறு தென்மலை என்றது. தன்பால் வாழ்வோருடைய அழுக்கு நீக்கும்
கடவுட்டன்மையுடைய தக்கிண சேடியை என்க.
 

( 79 )

அந்நகரச் சிறப்பு

652.

செஞ்சுடர் மின்னொளி 1சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
விஞ்சையர் செல்வம் 2வெறுத்தன ரன்றே.
 

     (இ - ள்.) செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட - தம் செவ்விய சுடருதலுடைய
மின்னினது ஒளி திசைகளிலே சென்று பரவ, மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை -
முகில்களோடு பொருந்தியுள்ள சிறந்த மணிகளால் ஆகிய மாளிகைகள், வெஞ்சுடர் வீதி
விலக்குவகண்டு - வெவ்விய ஞாயிற்று மண்டிலம் செல்லும் வழியைத் தடைசெய்து
நிற்றலைக் கண்டு, விஞ்சையர் செல்வம் வெறுத்தனர் அன்றே - அத் தூதுவர்கள்
விஞ்சையராகிய தம்மவர் எய்தியுள்ள செல்வமும் இப்போதனத் துற்ற செல்வத்தை நோக்க
ஒரு செல்வமாமோ என வெறுப்புற்றனர், (எ - று.)

     அப் போதன நகரத்தின் அழகு வளம் முதலியவற்றை நேரிற்கண்ட தூதர்கள்
தம்முடைய சிறந்த விஞ்சை நகரங்களும் இத்துணைச் சிறப்புடையன அல்ல என்று
வியந்தனர் என்க.
 

( 80 )

இதுவுமது

653.

மூரி முழாவொலி விம்மி முரன்றெழு
காரி 3மிழார்கலி யான்மயி லாலுவ
சோரி முழாவிழ விற்றெரு 4துற்றபின்
சீரி மிழாற்பொலி 5வெய்தினர் சென்றே.
 

      (இ - ள்.) மூரிமுழா ஒலிவிம்மி - பெரிய முழாவென்னும் தோற்கருவி யின் ஒலி
மிகுதலாலே, முரன்று எழு கார் இமிழ் ஆர்கலியான் - ஒசையுடனே வெரீஇ எழுகின்ற
முகில்களின் இடி முழக்கத்தாலே, மயில் ஆலுவ - மயில்கள் களித்து ஆடாநிற்கும்,
சோரிமுழா விழவில் - குருதிப்பலி கொள்கின்ற முரசம் முழங்குதற்குக் காரணமான

 

     (பாடம்) 1. சென்றுதிபாத்திட. 2. விடுத்தனர். 3. மிழாரொலி. 4. வாயபின்.
5. வெய்திரை