இதுமுதல் 3 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி |
663. | ஊடக மோடி யெரிந்தொளி முந்துறு மாடக மாயிர கோடியு மல்லது சூடக முன்கையர் 1தோடக மெல்லடி 2நாடக ராயிர 3நாரியர் தம்மையும். |
இது முதல் மூன்று செய்யுள் குளகம் (இ - ள்.) அகம் ஊடு ஒளி ஓடி எரிந்து முந்துறும் ஆடகம் - அகத்தினூடே ஒளிபாய்ந்து மிளிர்ந்து திகழும் பொன், ஆயிர கோடியும் - ஓர் ஆயிரங்கோடியும், அல்லது - அன்றியும், சூடக முன்கையர் அகம்தோடு மெல்லடி - வளையலணிந்த முன்கையையுடையாரும் அகவிதழ்போன்ற மெல்லியல் அடிகளையுடையாரும் ஆகிய, ஆயிரம் நாடக நாரியர் தம்மையும் - ஓராயிரம் கூத்தியல் அறிந்த விறலியரையும், (எ - று.) அல்லது எனல் வேண்டிய உம்மை தொக்கது. |
( 91 ) |
|
664. | தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி 4ரெண்டர ளம்பவ ழக்கொடி யீட்டமும் கண்டிரள் முத்தொடு காழகி 5லந்துகில் பண்டரு 6நீரன வும்பல பண்டமும். |
(இ - ள்.) தெண்டிரை சிந்திய சங்கொடு - தெளிந்த திரையெறி கடல்தந்த சங்குகளோடு, செங்கதிர் பவழக்கொடி எண்தரளம் ஈட்டமும் - சிவந்த ஒளியையுடைய பவழக்கொடியும் ஆராய்ந்த முத்துமாகியவற்றின் குப்பையும், கண்டிரள் முத்தொடு - மூங்கில் முதலியவற்றின் கணுக்களிலே தங்கித் திரண்ட முத்துக்களோடு, காழ் அகில் - நிறமமைந்த அகிலும், அந்துகில் - அழகிய ஆடையும், பண்தரு நீரனவும் - இசைக் கருவிகளும், பல்பண்டமும் - இன்னோரன்ன வேறு பல பண்டங்களும், (எ - று.) எண்டரளம் கடல்படுமுத்தென்றும் கண்டிரள்முத்து மூங்கில் கரும்பு முதலியவற்றில் விளைந்த முத்தென்றும் கொள்க. பண்டரு நீரன என்றது யாழ்முழவு முதலிய இசைக் கருவிகளை. |
( 92 ) |
|
665. | வெண்கதிர் 7முத்தகில் வேழ மருப்பொடு கண்கவர் சாமரை வெண்மயி 8ரின்கணம் தண்கதிர் வெண்குடை யாய்தரல் 9வேண்டுமி தொண்சுட ராழியி னானுரை யென்றார். |
|
|
(பாடம்) 1. பாடக. 2. மங்கையர். 3. நாடக மங்கையராயிரர். 4. ஒண்டிர. 5. லுந்துகில். 6. நீருள. 7. முத்தொடு. 8. ரீட்டந். 9. வேண்டும, வேண்டு. |