பக்கம் : 461
 

அறிவினாற் பெரியம் என்றது, இகழ்ச்சி.

     நல்வாழ்க்கையை அளிப்பது நல்வினையை என்று யாம் நன்றாக அறிந்திருந்தும்
அந்நல்வினை முயலாமல் ஒருவனை அடைந்து அவனுவப்ப அடிமை செய்து அவனருளால்
நன்கு வாழ்தும் என்று முயல்வது அறியாமை என்றபடி.
 

( 97 )

 
670.

அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா
லின்றுநா மவலித் தென்னை யினிச்செய்வ 1தெண்ணி னல்ல
வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு 2மேலை வேந்த
ரொன்றியாங் குவப்பித் 3தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே.
 

     (இ - ள்.) அன்று யாம் முயலப்பட்ட வினைகள் மற்றனைய ஆனால் - முன்னைப்
பிறப்பில் நாம் செய்தலாலே உண்டாய ஊழ் இத்தகைய தாயவழி, இன்று நாம் அவலித்து
என்னை - யாம் இப்பிறப்பில் அதனை அநுப விக்கும்பொழுது வருந்துதலால் யாது பயன்,
(ஆதலால் இது கிடக்க) இனிச் செய்வதெண்ணின் - இனி யாம் செய்யக்கடவ காரியத்தை
ஆராயுங்கால், நல்ல வென்றியான் விளங்கும் ஆழி அவர்கட்கு - சிறந்த
வெற்றியுடைமையால் மேம்பட்டுத்திகழும் சக்கரவர்த்திகளுக்கு, மேலைவேந்தர் - எம்முடையமூதாதையராய மன்னர்கள், ஒன்றி ஆங்கு உவப்பித்து ஆண்டது - பொருந்தியபடி
திறைப்பொருள் முதலியவற்றால் மகிழ்வித்து அவர்கட் கடங்கி நின்றே தம்நாட்டை
ஆண்டிருந்த வரலாற்றினை, உரைப்பக்கேட்டு ணர்ந்தாம் அன்றே - அறிஞர் கூறக்
கேட்டறிந்தோமல்லமோ, (எ - று.)

     பயாபதி மன்னன் தன்னுள்ளே ஆராய்ந்து ஒருமுடிவுக்கு வருகின்ற வன், பண்டைப்
பிறப்பில் யாம் அத்ததைய நல்வினை செய்யாதிருந்து, இப்போது கவல்வதனால் யாதுபயன்,
மேலும் நம்மூதாதையரும் சக்கரவர்த்தி களுக்குத் திறையிறுத்தே, வாழ்ந்த வரலாற்றையும்
யாம் உணர்வேம் அல்லமோ! என்று தன்னுள்ளே கருதி என்க.
ஆழியவர் என்றது சக்கரவத்திகளை. மேலைவேந்தர் முற்காலத்து மன்னர் எனினுமாம்.
தான் அதுகாறும் திறைகொடுத்ததின்மையாற் கேட்டு ணர்ந்தோம் என்றான்.
 

( 98 )

பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்

671.

என்றுதன் மனத்தி னெண்ணி 4யிலங்குகோற் கைய ராகி
நின்றகே சரரை நோக்கி நிலமன்ன 5னனைய சொன்னார்க்

 

 

     (பாடம்)1. தெண்ணினல்லான். 2. மேலும். 3. தாள்வ. 4. இலங்கொளி நகையராகி. 5. என்னை சொன்னான்.