பக்கம் : 464
 

     (இ - ள்.) அணி முழா அனைய தோளான் - அழகிய மத்தளமொத்த திரண்ட
தோள்களையுடைய பயாபதி மன்னன், அருளியதறிந்த போழ்தின் - கட்டளையிட்ட
செய்தியை அறிந்தவுடனே, மண்டல அரங்கின் - வட்ட வடிவமான நாடக அரங்கிடத்தே
அங்கண் குணிமுழா - அழகிய கண்ணையுடைய ஆராய்ந்தறிதற்குக் காரணமான
முழவென்னும் இசைக் கருவியினின்றும், பெயர்த்த பாணிகுயிற்றுதல் - எழீஇய இசைக்குப்
பொருந்தத் தாளம் அமைத்தலையும்; இலயம் கொண்ட கணிமுழா மருங்குல் -
சுதிசெய்யப்பட்டு நன்கு உணர்ந்தறிந்த முழாவின் பக்கத்தே, பாடற் கலிப்பு இவை - குரல்
எழீஇப்பாடும் இன்னிசைப் பாடலால் உண்டாகும் முழக்கமாகிய இவற்றை எல்லாம்,
தவிர்த்துச் சென்றார்-ஒழித்துப் புறப்படுவார்களானார், (எ - று.)

     பயாபதியின் கட்டளையைப் பெற்ற மகளிர்கள் அரங்கிடத்தே குயிற்றுதல், பாடற்கலிப்பு இவையிற்றை அவித்துப் போயினர் என்க.
 

( 102 )

இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒருதொடர்,
பயாபதி திறை நல்குதல்
675.

மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை 1வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
2வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர்ச் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் 3சேர்ந்தார்.
 

     (இ - ள்.) மஞ்சிடை மதர்த்த - முகில் வரவினால் களிப்புற்ற, மஞ்ஞை வான்குழாம்
என்ன - மயில்களின் சிறந்த கூட்டம் போல, ஆங்கண் - அவ்விடத்தே, வெஞ்சுடர்
விளங்கும் இடை நிலை மாடத்து - வெவ்விய ஒளியால் விளக்கமுற்ற இடைநிலை
மாடத்தின்கண், வஞ்சிநுண் மருங்குல் நோவ - வஞ்சிக்கொடி போன்று மெலிந்துள்ள இடை
வருந்தும்படியும், மணிநகைக் கலாவம் மின்ன - மணிகளால் ஆகிய சுடர்க்கற்றையுடைய
காஞ்சிக்கோவை மிளிரவும், செஞ்சுடர்ச் சிலம்பு பாட - செவ்விய ஒளியை உடைய
சிலம்புகள் இசைக்கவும், தேன்திசை பரவ - அளிகள் நான்கு திசைகளினும் இசையெடுத்
தேத்தவும், விரவித் தோன்றிச் சேர்ந்தார் - கலந்து காணப்பட்டு வந்து சேர்ந்தனர்.
(எ - று)

     அம்மகளிர்கள் மயிலின் கூட்டம் போன்று இடைநிலை மாடத்தே வந்து கூடி, நோவ
மின்னப் பாடப் பரவச் சேர்ந்தார் என்க.

( 103 )

 
676.

மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
பாடலா னரம்பின் 4தெய்வம் படிவங்கொண் டனைய நீரா
ராடலா லரம்பை யொப்பா 5ரவரிலா யிரரை யீந்தான்.

 

 

     (பாடம்) 1. க்குழா மென முகில் கண்போது, போழும். 2. வஞ்சி நுண்.
3. சென்றார். 4. தெய்வப். 5. ஆயிர ரவரை.