பக்கம் : 469
 

     நெய்த்துளி கடுத்த நீர்த்திவலை என இயைத்துக்கொள்க. நம்பியின் நெற்றிமேல்
சிறுவெயர்ப்புள்ளி முத்துதிர்ந்தாங்கு பொடித்தன, கண்ணும் நீர்த்துவலை கான்றன என்க.
 

( 110 )

 
683.

படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
1கடுத்திடு 2மரவெனக் கனன்ற நோக்கமோ
டடுந்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
யெடுத்துரை கொடுத்தன னிளைய காளையே.
 

     (இ - ள்.) படத்திடை - தனது படத்தின் நடுவில் உள்ள, சுடர்மணி -
ஒளியுடையமணி, தீண்டப்பட்டு - அயலான் ஒருவனால் தீண்டப் பட்டமையால்,
எரிகடுத்திடும் அரவென - நெருப்பை ஒத்துச்சினந் தெழுகின்ற பாம்பைப்போல, கனன்ற
நோக்கமோடு - அழலும் கண்களோடு, அடுத்து எரிந்து - மேலும் மேலும் சினந்து, அழல்
நகை நக்கு நக்கு - சினச்சிரிப்பு அடிக்கடி சிரித்துச் சிரித்து, எடுத்து உரை கொடுத்தனன்
இளைய காளையே - திவிட்டன் பின்வரும் வாசகங்களை எடுத்துக் கூறுவா னாயினான்,
(எ - று.)

     ஒருவனால் தன் படத்திலுள்ள மணி தீண்டப்பட்டதாக, கனன்றெழும் பாம்பேபோல்
நம்பி கனன்றெழுந்து அழல் நகை நக்கு நக்கு எடுத்துக் கூறினான், என்க.
 

( 111 )

இதுமுதல் 7 செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சினமொழிகள்
684.

உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ
லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
லழகிது பெரிதுநம் 3மரச வாழ்க்கையே.

     (இ - ள்.) நம் அரச வாழ்க்கை - நாம் வாழுகின்ற உயரிய அரச வாழ்க்கையாவது,
உழுது தம் கடன் கழித்து உண்டு - நிலத்தை உழுகின்ற தொழிலைச் செய்து, அரசிறை
முதலிய தம் கடன்களைச் செலுத்தித் தம் வயிற்றையும் ஓம்பி, வேந்தரை வழி மொழிந்து -
அரசருக்குப் பணிமொழி கூறி, இன்னணம் வாழும் - இங்ஙனமாக வாழுகின்ற,
மாந்தர்போல் - ஏழை மனிதர்களைப் போல, எழுதிய திறையிறுத்து இருந்து -
பகை மன்னர்

 

     (பாடம்) 1. கடுத்தெரி. 2. கடுத்துரகம்மென. 3. அரைச.