பக்கம் : 470
 

     எழுதி விடுத்த திறைப்பொருளை அவர்க்கு அஞ்சிக் கொடுத்து உயிர் வாழ்தலை
விரும்பி இருந்து, வாழ்வதேல் - வாழ்கின்ற வாழ்வே ஆகுமாயின், பெரிது அழகிது -
இவ்வாழ்க்கை மிகவும் அழகுடைத்து, (எ-று.)

உழுதுஇறை செலுத்தி உண்டு வழிமொழிந்து வாழும் எளிய உழவர் வாழ்க்கைபோன்று,
பகைமன்னர் எழுதிவிடுத்த திறைப் பொருளை நல்கி அஞ்சியிருந்து வாழும் அரச
வாழ்க்கை, மிக நன்றென்றான் என்க.
 

( 112 )

 
685.

நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா
டாளுது மன்றெனி 1லொழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனை மயரி 2மாந்தர்காள்.
 

     (இ - ள்.) மயரி மாந்தர்காள் - மதிமயக்கமுடைய தூதர்களே ! நாளின் -
வரையறுக்கப்பட்ட காலத்தே, நுமக்கு - உங்களுக்கு, உந்திறை உவப்பத் தந்து -
உமக்குரித்தாகிய திறைப் பொருளை நீவிர் மகிழும் அளவிற்றாகக் கொடுத்து, நாடாளுதும் -
உங்கள் அருள் உண்மையால் அதுபற்றுக் கோடாகக்கொண்டு நாட்டை ஆள்வோம்,
அன்றெனில் - அங்ஙனமல்லா தொழியின், ஒழிதுமேல் - அரசியலிழுந்து அழிந்து
ஒழிவோமாயின், எமதோளினும் - எம்முடைய மலையெனத் திரண்ட தோள்களாலும், தொடு
கழல் வலியினாலும் - கழல்கட்டிய எம் தாள்களின் ஆற்றலானும், இவ்வாளினும் - இதோ
என் கையகத்ததாகிய இக் கூர்வாளாலும, பயன்எனை - பயன் வேறென்னாம், (எ - று.)

மயரிமாந்தர்காள், என்றது அச்சுவகண்டனை உளப்படுத்தித் தூதரை விளித்த தென்க.
மாந்தர்காள் நீயிர் உவப்பத் திறைகொடுத்தால் வாழ்தும், அன்றெனில் ஒழிதும் எனில்,
எம்தோளானும், வலியானும், வாளானும் பயன் என்னாம்.
 

( 113 )

 
686.

விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
யடலுடைக் கடுத்தொழி லரவி னாரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனும் மயரி மன்னனே.
 

     (இ - ள்.) உம் மயரி மன்னன் - உங்கள் மன்னனாகிய மயக்கமுடைய
அச்சுவகண்டன், அடலுடை கடுத்தொழில் - கொல்லுதற் றொழிலுடைய
நஞ்சைக்கொண்டுள்ள, கொடி எரி விலங்கு ஆரழல் நோக்குடை - ஒழுங்குபட்ட
ஒளிக்கதிரோடு கண்டோர் அஞ்சி அகலுதற்குக் காரணமாக
 

 

     (பாடம்) 1. ஒழியு. 2. மாந்தர் காண்.