பக்கம் : 474 | | (இ - ள்.) போகிய தூதர் - அவ்வாறு மீண்டுபோன தூதர்கள், தங்கோன் பொலங் கழல் தொழுதல் அஞ்சி - தம் அரசனாகிய அச்சுவகண்டனுடைய பொற்கழலணிந்த அடிகளை வணங்குதற்கு அஞ்சியவர்களாய், ஆகியது அறிந்து சூழும் அரிமஞ்சு அவனைக்கண்டே - உற்றதுகொண்டு மேல்வந்துறுவது ஆராயும் அமைச்சனாகிய அரிமஞ்சு என்பானைக் கண்டு, ஏகிஅ புகழினானைக் கண்டதும் - தூதுசென்று அப்புகழ் நிறைந்த பயாபதி வேந்தனைக் கண்ட செய்தியும், ஈயப்பட்ட - அப்பயாபதியால் திறையாக இறுக்கப்பட்ட, தோகையஞ்சாயலார் தம் குழாங்களும் நெதியும் சொல்லி - மயில்போலும் அழகிய சாயலுடைய மகளிர்கூட்டத்தின் பெருமையும் நிதிக் குவியல்களின் பெருமையும் எடுத்துக் கூறி, (எ - று.) அப்புகழினான் - எதுகைநோக்கி பகரவொற்று மிகாதாயிற்று. சென்ற தூதர்கள் அச்சுவகண்டனைக் காண்டற்கஞ்சி அரிமஞ்சுவினிடம் புகழினானைக் கண்டதும் அவன் திறைதந்த மகளிர் குழாங்களும் நிதியும் சொல்லியிட்டார் என அடுத்த செய்யுளில் முடிவு காண்க. | ( 120 ) | இதுவுமது | 693. | மீட்டிளங் 1குமரர் கண்டு விடுசுட ரிலங்க நக்கு மோட்டிளங் கண்ணி தீய முனிந்தழன் முழங்க நோக்கி யூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம் தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார். | (இ - ள்.) ஊட்டிலங்கு உருவக்கோலோர் - அரக்கூட்டியதனாலே விளங்குகின்ற கைக்கோலையுடைய தூதர்கள், மீட்டு இளங்குமரர்கண்டு - மறுபடியும் இளங்காளையராகிய விசயதி விட்டர்கள் தம்மைப் பார்த்து, விடுசுடர் இலங்கநக்கு - பல்லொளி மிளிரச் சிரித்து, மோட்டிளங்கண்ணி தீயமுனிந்து - சிறந்த இளைதாகிய முடிமாலை கரிந்துபோமாறு சினந்து, அழல் முழங்க நோக்கி - கண்கள் தீக்காலத் தம்மைப் பார்த்து, தங்களுக்கு உரைத்த எல்லாம் - தம்பால் சொல்லி விடுத்த செய்திகளை யெல்லாம், தோட்டிலங்கு உருவத் தொங்கல் அமைச்சற்குச் சொல்லியிட்டார் - இதழ்களால் விளக்கமுடைய அழகிய மாலையணிந்த அமைச்சனாகிய அரிமஞ்சு என்பானுக்குக் கூறினார், (எ - று.) விசய திவிட்டர் தம்மைக் கண்டதும். அவர் முனிந்துரைத்ததும் எல்லாம் சொல்லியிட்டார் என்க. | ( 121 ) | அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல் | 694. | அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு 2வதனைக் கேட்டே பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா | | |
| (பாடம்) 1. குமரன். 2.இதனைக். 3. என்கொல். 4. சூட்சி. | | |
|
|