பக்கம் : 475
 
 

னிரும்பகை யிதனை 1யென்கொல் விலக்குமா றென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன்2சூழ்ச்சிகொண் மனத்தனானான்
 

     (இ - ள்.) அரும்பெறல் அறிவின் - அரிதில் முயன்று பெற்ற அறிவையுடையோனும்,
செல்வன் - சிறந்த செல்வம் உடையவனும், சுரும்பு இவர் தொடையல் மார்பன் - அளிகள்
மொய்க்கின்ற பூந்தொடையலை அணிந்துள்ள மார்பினனும் ஆகிய, அரிமஞ்சு
அதனைக்கேட்டே - அரிமஞ்சு என்னும் அவ் அமைச்சன் அத்தூதர்கள் கூறிய செய்தியைக்
கேட்டு, பெரியவன் - பெரியவனாகிய அச்சுவகண்டன், பெரும்பகை அதனைக் கேட்பில்
சிறிதும் நோனான் - பெரும்பகைக்குக் காரணமான அத்திவிட்டன் கூற்றைச் செவியுறப்
பெறின் ஒரு சிறிதும் பொறான், இரும்பகையிதனை - பெரிய பகையாகிய இந்நிகழ்ச்சியை,
என் கொல் விலக்கும் ஆறு என்று - நிகழாமற்றடுக்கும் வழியாது என்று, தானே சூழ்ச்சி
கொள் மனத்தன் ஆனான் - தனக்குள் தானே ஆராய்ந்துகொள்ளும் நெஞ்சையுடையவன்
ஆனான், (எ - று.)
தூதர்கள் கூறக்கேட்ட அரிமஞ்சுவும், உடனே அச்சுவகண்டனுக்கு இதனைக் கூறின் அவன்
பொறான்; இப்பகையை எளிதிற்றீர்க்கும் ஆறு வேறு யாதாம் என ஆராய்ந்தான், என்க.
 

( 122 )

இதுவுமது

695.

மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா
னன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாதலால் யா
னொன்றவோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக்
குன்றிடைச் சீயந் தன்மேற் 3கொளப்புணர்த் திடுவ னென்றான்.
 

     (இ - ள்.) மின்தொடர்ந்து இலங்குபூணான் - ஒளிஇடையறாது விளங்கும்
அணிகலன்களையுடைய திவிட்டன் என்பான், விளைவுறா இளமை தன்னால் -
அறிவுமுதிரப்பெறாத இளமை உடைமையால், நன்று தீது என்னும் தேர்ச்சி நவின்றிலன் -
நல்லது இது கெட்டது இது என்றறிகின்ற தேர்ச்சி யறிவின் நின்று இவ்வாசகங்களைச்
சொல்லினானலன், ஆதலால் - அங்ஙன மிருத்தலால், யான் ஒன்றவோர் மாயங்காட்டி -
யான் பொருந்து மாற்றால் ஒரு மாயத்தைச்செய்து, உளைவித்து - அத்திவிட்டனைக்
கலக்கங்கண்டு, குறுகஓடி - நெருங்கிச் சென்று, குன்றிடை - மலைக்குகையில் உறைகின்ற,
சீயந்தன்மேல் கொள்ள - சிங்கம் திவிட்டன்மேல் பாய்தலை மேற்கொள்ளும் படி,
புணர்த்திடுவன் என்றான்-சூழ்ந்திடுவன் என்றான், (எ - று.)

 


     (பாடம்) 1. என்கொல். 2. சூட்சி. 3. கொளப் புளர்ந்.