பக்கம் : 477
 

அதிரும் - இடிஇடித்தாற்போல முழங்கும், பேழ்வாய் - பெரிய வாயையும் உடையதோர்,
கொள்அரி உருவுகொண்டான் - சிங்கத்தின் உருவத்தை மேற்கொண்டான் ; (அவன்
யாரெனில்) கொடியவன் கடியசூழ்ந்தான் - தீயவனும் தீமை செய்ய ஆராய்ந்து
முற்பட்டவனும் ஆகிய அரிகேது - என்பான், (எ - று.)

     கோளரி - கொள்ளரி என விகாரமெய்தி நின்றது. அரிகேது, சுரியுளை, வள்ளுகிர்,
வாளெயிறு, பைங்கண், அதிரும் பேழ்வாய், ஆகிய இவையிற்றை உடைய அரிமாவுருக்
கொண்டான் என்க.
 

( 125 )

அவ் வரிமாவின் செயல்

698.

இலைத்தடஞ் சோலை வேலி 1யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மண்புடை 2பெயர முந்நீ
ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்.
 

    (இ - ள்.) இலைத்தடம் சோலைவேலி இமவந்தம் அடைந்து இலைகள் செறிந்த
அகன்ற பொழில்களை வேலியாகவுடைய இமயமலையை எய்தி, நீண்ட சிலைத்தடம்
தோளினார்தம் சிந்து நாடதனைத் சேர்ந்து - நெடிய விற்படை பொருந்திய தோளையுடைய
விசய திவிட்டருடைய சிந்து நாட்டையடைந்து, மலைத்தடம் பிளந்து சிந்த - மலையிடங்கள்
பிளவுபட்டு திருமாறும், மண்புடை பெயர - நிலம் நடுங்குமாறும், முந்நீர் அலைத்துடன்
கலங்கி விண்பால் அதிர - கடல் திரையெடுத்துக் கலங்கி விசும்பு அதிர ஒலிக்குமாறும்,
நின்று உரறியிட்டான் - நின்று முழக்கம் செய்தான், (எ - று.)

     அரிகேது அரிமாவாகி, இமயமலை வழிச்சென்று சிந்து நாட்டை எய்தி, மலைபிளந்து சிந்தவும், மண்புடை பெயரவும், முந்நீர் கலங்கவும், விண் அதிரவும் முழங்கினான் என்க.
 

( 126 )

அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்

699.

பொடித்தலை புலம்பிக் கானம் 3போழ்ந்துமா நெரிந்துவீழ
வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் 4சோர்ந்தார்.
 

      (இ - ள்.) பொடித்தலை புலம்பி - மணல்பரந்த வெளியில் எதிர் முழக்கொலி
எழாநிற்பவும் ; கானம் போழ்ந்து - காடுகள் பிளந்து போகவும், மாநெரிந்துவீழ -
அதன்கண் உறையும் விலங்கினங்களின், உடல்நெரிந்து

 

     (பாடம்) 1 இமவந்தும். 2. பெயர்ந்து, பெயர்ந்த, பெயர முன்னர். 3. பொழின்மர, பொழினமர். 4. சேர்ந்தார்.