(இ - ள்.) புதல்கை திண் நுதி மருப்பின - தொளை பொருந்திய துதிக்கையையும் உறுதியான நுனியுடைய கொம்புகளையும் உடைய, பொருகளிறு - போர் யானைகளாகிய, நிழற்கண் நோக்கி நின்று அழன்றன - தம் நிழலைத் தாமே பார்த்து நின்று சினக்கின்ற, இவைதாம் - இவைகள், நிலையிடம் புகுக - இவைகட்டும் தறியிடத்தில் அடைவனவாகுக; கண் அழல் நாறும் - கண்களில் தீக்காலும், அடுபடை தொடுதலை மடியா - கொல்லும் படைதாங்குதலில் சோம்புதலில்லாத, தொழிற்கணாளரும் - போர்த்தொழிலையே கண்ணாகப் போற்றும் நம் மறவரும், தவிர்கென - எம்மொடு தொடர்ந்து வருதலைத் தவிர்வாராக என்று, சூளுற்றான் - வஞ்சினம் சாற்றினான், (எ - று.) இக்களிறுகள் தம் சேவகம் புகுதுக, மறவரும் எம்மொடு வருதலைத் தவிர்க! யான் தனிச் சென்று அவ்வரிமாவைக் கொல்வல் என்று சூளுற்றான் என்க. |
(இ - ள்.) இவரும் - ஊர்ந்து செல்லும், மாமணிக் கொடுஞ்சிய - சிறந்த மணிகள் பதித்த கொடுஞ்சிகளையுடைய, இவுளித்தேர் - குதிரைபூட்டிய தேரும்; காலாள் - காலாட் படையினராகிய மறவரும், கவரிநெற்றிய புரவி - மயிர்க்குஞ்சம் கட்டிய நெற்றியையுடைய குதிரைகளும், தம் காவிடம் புகுக - தத்தம் பொழிலிடங்களை அடைக, எவரும் என்னொடு |