திவிட்டனும் ஓடும் வழியில் பின் தொடர்ந்து, எழுந்த - பறிபட்டெழுந்தன, நிரந்தமான்களும் பறவையும் - பரவிய மான் முதலிய விலங்குகளும் பறவைகளும், நிலங்கொண்டு பதைத்த - நிலத்தின்மேல் வீழ்ந்து துடித்தன, அரங்கொள் வெம்பரல் - அரத்தால் அராவப்பட்டன போற் கூறிய வெவ்விய பரற்கற்களையுடைய, அணிவரைக் கொடு முடியவை தாம் - அழகிய மலைச்சிகரங்கள், உரங்கொள் தோளவன் - வலிமிக்க தோளையுடைய திவிட்டன், விரல்நுதியுற - விரல்களால் எற்றுண்டு, உடைந்தொழிந்த - உடைந்து சரிந்தன, (எ - று.) அவ்வழி மரங்கள் பறிப்புண்டு. தொடர்ந்து எழுந்தன, மான்களும் பறவையும் நிலத்தே வீழ்ந்தன. மால்வரைக் கொடுமுடி நம்பியின் கால் விரலிலே எற்றுண்டு உடைந்தன என்க. |
(இ - ள்.) மூடியிட்டன முகிற்கணம் முரன்று - மேகங்கள் ஒலித்து விசும்பைக் கவிழ்ந்துகொண்டன, கொடு முடித்துறு கற்கள் - சிகரங்களின் குறுங்கற்கள், நொறுங்காய்க் கூடியிட்டன - துகள்களாகிக் குவிந்தன, வனதெய்வம் குளிர்ந்தாங்கு ஆடியிட்டன - வனதேவதைகள் உளமகிழ்ந்து ஆடின, அரிஉருவுடையான் - சிங்க உருவத்தையுடைய அரிகேது, ஓடியிட்டனன் ஒளிவரை முழையகத்து ஒளித்தான் - விரைந்தோடி மறையுமி டமாகிய மலையினது குகையில் ஒளிந்துகொண்டான், (எ - று.) வனதெய்வங்கள் இவனால் தீயோர் அழிவர் நல்லோர் வாழ்வர் என்று கருதி மகிழ்ந்து ஆடின என்க. அரிகேது மெய்ச்சிங்கங்கள் உறையுமொரு முழையிலே ஓடி மறைந்தான் என்க. |