பக்கம் : 491 | | இறுவரை - பெரிய மலை; அடிமலையுமாம், இற்ற மலையுமாம். விரிந்த - புலப்பட்டன என்றவாறு. கேசரம், பிடரிக்கு ஆகுபெயர், வெளிப்பட்ட உகிர் என்க. சிங்கம் உகிரைச் சுருக்கிக் கோடலும் வெளிப்படுத்தலும் உண்டு. | ( 149 ) | அவ் வரிமா வெளிப்படுதல் | 722. | தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை வாரித் திட்டிவண் வந்ததோ ரரியென மதியாப் பூரித் 1திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப் பாரித் திட்டது பனிவிசும் 2புடையவர் பனித்தார். | (இ - ள்.) தாரித்திட்ட தன் தறுகண்மைக் குணங்களின் - தான் தரித்துள்ள அஞ்சாமைக் குணங்கள் காரணமாக, உலகை வாரித்திட்டு - உலகை வெல்ல விரும்பிப் பகையை வரித்து, இவண் வந்ததோர் அரி - இங்கு நம்மைத் தேடிவந்த ஒப்பற்ற பகைச்சிங்கம் போலும், என மதியா - என்று எண்ணி, பூரித்திட்ட தன் பெருவலியோடு புகழுடை அரிமா - பூரிப்படைந்த ஆற்றலும் புகழும் உடைய அச்சிங்கம், பாரித்திட்டது - வெளிப்பட்டது, பனிவிசும்புடையவர் பனித்தார் - குளிர்ந்த வானுலகில் வதியும் அமரர்கள் நடுங்கினார்கள், (எ - று.) தாரித்தல் - தரித்தல். வாரித்தல் - வரித்தல் - விழைதல்: நீட்டும் வழிநீட்டல் பூரித்தல் - மகிழ்ச்சியால் உடல் விம்முதல் பாரித்தல் - வெளிப்படுதல், தறுகண்மையிற் செருக்குடைய ஓர் அரிமா பகையரிமாவைத் தேடி என்பால் வந்துளதுபோலும் எனமகிழ்ந்து அவ்வரிமா வெளிப்பட்டது, அமரர்கள் அஞ்சினர் என்க. | ( 150 ) | திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல் | 723. | அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான் பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி 3யரியே. | (இ - ள்.) மார்பினுள் அளைந்து - தனது வலியஉகிர்களால் மார்பினுள் துழாவி, இழிதருகுருதியைக் குடிப்பான் - சோர்கின்ற செந்நீரைக் குடிக்கும் பொருட்டு, உளைந்து - பிடரிக்கண் உள்ள மயிர்சிலிர்த்து, கோளரி - சிங்கம், எழுதலும் - எழுந்து தன் மேல் பாய்தலும், உளைமிசை மிதியா - திவிட்டன் அதன் பிடரின்கண் தன் அடியை வைத்து, வளைந்த வாள்எயிற்றிடை - வளைந்த ஒளியுடைய பற்களின் இடையின், வலித்தடக் கையிற் |
| (பாடம்) 1. தட்டதன் 2. புடைய வாய்பணித்தார். 3. யதுவே T. P. M. பிரதியில் ஓரென் தவறிவிட்டது. 721 - 723. என்றுள்ளன. | | |
|
|