பக்கம் : 498
 

     (இ - ள்.) வழையும் - சுரபுன்னையும், வாழைத்தடங்காடும் - வாழைமரம் செறிந்த
பெரிய காடும், மூடி - கவிழ்ந்து, புடம் கழையும் - பக்கங்களில் அழகிய கரும்பும், வேயும் -
மூங்கில்களும், கலந்து - இருண்டு செறிந்து இருளைச் செய்து, காண்டற்கு அரும் முழையும்
- காணுதற்கியலாத நெடிய குகைகளையும், மூரிம் மணிக்கல்லும் - பெரிய மாணிக்கக்
கற்களையும் உடையவாய், எல்லாம் - இவைகள் எல்லாம், நினது இழையின் - உன்னுடைய
அணிகலன்களையும் ஆடைகளையும்போல, அம்பொன் ஒளியெறிப்பத் தோன்றுங்கள் ஏ -
அழகிய பொன் ஒளிவீசித் தோன்றுவனவாம், (எ - று.)

     வாழை வாழை முதலிய பசிய ஆடைகட்கும் மணி முதலியன அணி கட்கும் கொள்க.
 

( 162 )

வேறு
735.

பருவமோ வாமுகிற் படலமூ டிக்கிடந்
1திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழிந்
தருவி 2யோ வாபுரண் டசும்புபற் றித் 3தட
வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா 4கார்களே
 

      (இ - ள்.) பருவம் ஓவா முகிற் படலம் - பெய்தற் பருவத்தில் ஒழிதலில்லாத மேகக்
குழாங்கள், மூடிக்கிடந்து - அம்மலைப்பகுதியை மூடியவாறே கிடத்தலால், இரவுண்டு
ஏனைப்பகல் இல்லை - அங்கு எப்பொழுதும் இராக்காலமாக இருப்பதல்லால்
மற்றைப்பகற்காலம் தோன்றுவதில்லை, ஒல் என்றிழிந்து - ஒல் என்னும் ஓசையுடனே
இறங்கி, அருவி ஓவா புரண்டு அசும்பு - நீர் அருவிகள் ஓய்தலில்லாதே புரண்டு
ஒழுகுதலை, பற்றித் தடவரையின் தாழ்வார் நிலம் - இடையீடின்றிப் பெற்று அகன்ற
மலையினது சரிவிற் பொருந்திய நிலங்கள் கிடத்தலின், வழங்க லாகார்கள் - அவ்விடத்தே
மக்கள் வழங்குதலிலர், (எ - று.)

     எப்போதும் கார்ப்பரும் போலே அவ்வரைகளில் முகில் குழுமி மூடிக் கிடத்தலானும்,
ஒழியாது அருவி பாய்தலானும், ஆங்கு மக்கள் வழங்கல் அரிதென்றான் என்க.

( 163 )

 

736.

சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊர 5லோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
சாரலா காதன சாதிசா லப்பல.

  


     (பாடம்) 1. திரவோ. 2. யோலா. 3. துடல் வரையின். 4. காகளே. 5. லோவாதன னுயிரையுண். .