பக்கம் : 499
 

     (இ - ள்.) சூரல்அப்பித் தொடர்ந்து அடர் - பிரப்பங் கொடிகள் பற்றிப்படர்ந்து
அடர்தலாலும், துளங்கும் அரில் - அசைதலையுடைய குறிய முட்புதல்கள்,
வேரலோடுமிடைந்து - மூங்கிற்காடுகளோடு செறிதலாலும், இருண்டு - இருண்டு
கிடத்தலாலும், சாலப்பல சாதி - அக்காட்டில் வாழும் இயல்புடைய மிகவும் பலவாகிய
மிலைச்சச்சாதி மானிடர், ஊரல் ஓவாது - அங்குமிங்கும் திரிதலை ஒழியாமல், உயிரை -
உயிரினங்களை, கனன்று - சினந்து, விடார் - பற்றிவிடாதவர்களாய், விண்டு - அவற்றைப்
பிளந்து, உண்டிடுதலால் - தின்றுவிடுதலால், சாரலாகாதன - மானிடர்கள் வழங்கவியலாதன
இவ்விடங்கள், (எ - று.)

     சாதி உயிரை அனன்று விடார் விண்டு உண்டிடுதலால் சாரலாகாதன என்றியைத்துக்
கொள்க. சாதி மானிடசாதியினரைச் சேர்ந்த ஊனுகர் மிலைச்சர் என்க. ஊன்தின் சாதி
உண்மையில் அங்குப்பிறர் சாரலாகா தென்றான் என்க.
 

( 164 )

வேறு
737.

பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்
திரியவே ழங்களை விழுங்கியெங் 1குந்தமக்
குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்
பெரியபாம் பும்முள் பிலங்கொள்பேழ் வாயவே.
 

      (இ - ள்.) பரிய பாறைத்திரள் - பெரிய பாறைக் கற்களின் திரளின்மேல், படர்ந்த
போலக் கிடந்து - படர்ந்து கிடப்பன போலக் கிடந்து, இரிய - அஞ்சிஓட, வேழங்களை -
யானைகளைப் பிடித்து, விழுங்கி எங்கும் - விழுங்குதலைச் செய்து எவ்விடத்தையும், தமக்கு
உரிய தானம்பெறா - தங்களுக்கு உறைவிடமாகப் பெற்று, உறங்கி - உறக்கங்கொண்டு,
ஊறுங் கொளா - ஊற்றுணர்ச்சியும் அற்றனவாய், பிலங்கொள் பேழ் வாய - குகையை ஒத்த
பெரிய வாயினையுடையவாகிய, பெரிய பாம்பும் உள - மிகப் பெரிய மலைப்பாம்புகளும்
இவ்விடத்துள்ளன, (எ - று.)

     பாறைக் கற்களிற் பரிய கொடிகள் படர்ந்தாற்போன்று கிடந்து யானைகளை விழுங்கி ஊற்றுணர்ச்சியும் அற்றவாய்க் கிடந்துறங்கும் பெரிய பாம்பும் உள என்றான் என்க.
 

( 165 )

 

738.

அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
இவைகள்கண் டாய்சில வேழவீட் 2டம்பல
நவைகள்கண் டாயிவை நம்மலா தார்க்கெலாம்.

  


     (பாடம்) 1. குந்மகக். 2. டடிபல.