பக்கம் : 500 | | (இ - ள்.) அவைகள் - அவ்விடத்தே காணப்படுவன, ஆலிப்பன சில அரவம் - ஆடுவனவாய சில பாம்புகளாம், உவைகள் ஒல்லென்பன சில உளியம் - ஊங்கே தோன்றுவன ஒல்லென ஒலிக்கும் சில கரடிகளாம், இவைகள் இவ்விடத்தே காணப்படுவன, சில வேழ வீட்டம் - சில யானைக் கூட்டங்களாம், இவை - இக்காட்சிகள் எல்லாம், நம்மலா தார்க்கு எலாம் பல நவைகள் திவிட்டனே - நம்மிருவர்க்குமல்லாமல் பிறர் யாருக்கும் பல்வேறு இன்னல்களே தருவனவாம், (எ - று.) கண்டாய் என்பன நான்கும் அசைகள். அவைகள் பாம்புகள், உவைகள் கரடிகள், இவைகள் யானைகள் நம்மையன்றிப் பிறர்க்கு இவை பெரிதும் துன்பஞ்செய்வனவாம் என்றான் என்க. | ( 166 ) | | 739. | குழல்கொடும் பிக்கணங் கூடி 1யா டநகும் எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின் கழல்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம் பொழில்கள்வெள் ளத்திடைப் 2புரளநூ றுங்களே. | (இ - ள்.) குழல்கொள் - வேய்ங்குழலிசையை ஒத்த இசையையுடைய, தும்பிக்கணம் - அளிக்கூட்டங்கள், கூடிஆட - கூடியிருந்து தேனுண்டு களித்து ஆடுமாறு, நகும் - மலர்ந்து விளங்கும், எழில்கொள் தாரோய் - அழகிய மாலையையுடைய இளையோனே, விரைந்து இயங்கல் - இங்ஙனம் நீ விரைந்து நடத்தலை ஒழிக, இங்குள்ள நின் கழல்கள் ஆர்க்குங்கள்ஏ - இவ்விடத்தே உள்ள உன் வீரக்கழல்கள் (விரைந்து நடந்துழி) ஆரவாரிக்குமன்றே! அங்ஙனம் ஆயின், மேகக்குழாம் கலங்கி - முகிற்கூட்டங்கள் அவ்வார்ப்பினால் கலக்கமுற்று, பொழில்கள் வெள்ளத்திடைப்புரள - சோலைகள் வெள்ளத்தால் முழுகிப் போம்படி, நூறுங்கள் - நொறுங்கி வீழும், (எ - று.) ஆர்க்கும் கள் ஏ: கள் - விகுதிமேல் விகுதி; ஏ : அசை. பிறாண்டும் இவ்வாறே கொள்க. நூறுங்கள் - பொழியும் எனினுமாம். நீ உனது கழல் ஒலிக்குமாறு நடத்தலைத் தவிர்க, தவிராயெனில் மேகங்கள் கலக்கமுற்றுப் பொழிந்து வெள்ளமுண்டாக்கும் என்றான் என்க. நம்பியின் கழல் முகில் கலங்க ஒலிக்கும் போலும். | ( 167 ) | | 740. | ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற் காக்கலா காகளி றாழவா ழும்புறந் தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே. | (இ - ள்.) ஆக்கலாகா அசும்பிருந்து - செயற்கையான் உண்டாக்க வியலாத இயற்கை ஊற்றுக்கண்கள் உளவாகி, கண்ணிற்கொரு நீக்க நீங்கா |
| (பாடம்) 1. யாடத்தகும். 2. நாறுங்களே. | | |
|
|