பக்கம் : 501
 

    நிலம்போலத் தோன்றி - விலக்குதற்கியலாத வன்னிலம் போன்று காட்சிமாத்தி ரையே
புலனாகி, புகில் - அதன்மேல் அறியாது செல்லுமிடத்தே, காக்கலாகாகளிறு ஆழஆழும் -
தன்னைக் காத்துக்கொள்ள வியலாதபடி யானைகளும் முழுகிப் போமாறு ஆழ்ந்துவிடும்
இயல்புடைய, புறம்தூக்கந் தூங்கும்தொளி - மேற்புறம் இறுகி உட்பகுதி
தொளுதொளுவென்றிருக்கும் சேற்றுநிலத்தே, தொடர்ந்து பொன்றுங்கள் - உயிர்கள்
அறியாமையால் சென்றழுந்தி மாயும், (எ - று.)

     தூக்கந்தூங்குதல் - தொளதொளெனல், பொன்றுங்கள் என்ற குறிப்பால் உயிர்கள்
என்பது வருவித்துரைக்கப்பட்டது. மேற்புறம் இறுகி, உட்புறம் சேறாக இருக்கும் நிலத்தே
உயிர்கள் அறியாதே சென்று மாயும் என்றான் என்க.
 

( 168 )

 
741.

இதுவித்தாழ் 1வார்நிலத் தியற்கைமே 2லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற் 3பா றையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்று 4துஞ் சன்னிலைக்
கதியின்வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே.

     (இ - ள்.) இது - இதுகாறும் கூறியது, இத்தாழ்வார் நிலத்தியற்கை - இம்மலைச்சரிவு
நிலங்களின் தன்மைகளாம், மேலால் பல மதியம் பாரித்தென - இனி
இம்மலைச்சிகரங்களிலோ எனில், பல திங்கள் மண்டிலங்கள் ஒரு சேர ஒரு காலத்திலே
வெளிப்பட்டாற் போன்ற, மணிக்கற் பாறையின் மிசை - மாணிக்கக் கற்சிகரங்களின் மேல்,
நிதியம்பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் - பல்வேறு செல்வங்ளும் மிகுத்துக் கிடந்து ஒளிவீசி
மிளிர்ந்து கிடத்தல் ஆகிய காட்கிகள், நிலைக்கதியின் வாழ்வாரையும் - அவாவறுத்து
நிலைத்த கேவலஞானத்தின் நின்று வாழும் துறவியரையும், கண்கள் வாங்குங்கள் -
கண்கவரும், (எ - று.)

     பொறியடக்கமுடைய துறவிகள் கண்களையும் இம் மலைநிலத்தே கிடந்திமைக்கும்
மதியம்பாரித்தன்ன நிதியம் கவரும் என்றான் என்க.
 

( 169 )

வேறு

742.

இருது வேற்றுமை யின்மையாற்
5சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய். 

    


     (பாடம்) 1. வாந்நிலத். 2. லாம்பல. 3. பாறைம் மிசை. 4. துஞ்சுந் நிலைக். 5. குருதி.