பக்கம் : 504
 

     (இ - ள்.) இளையார் - இளைய ஆடவர்கள், இளையாருடனாய் - தம் தோழராகிய
இளையாருடனே, முலையின் - கொங்கைகளையுடைய, வளையார் - வளைவுடைய வளையார்
- வளையலணிந்த மகளிர்களுடைய, மனம் வேண்டு உருவம் - நெஞ்சம் விரும்புதற்குக்
காரணமான கோலம் கோடலை, விளையா - மேற்கொண்டு செய்து, விளையாட்டு -
பொருந்திய விளையாட்டினை, அயரும் தொழில்தான் - இயற்றுகின்ற தொழிலை, தளையார்
- ஒழியார்கள், தளையார் பொழிலின் தடமே - மனத்தைத் தன்பாற் பிணிக்கும் எழிலுடைய
இப்பொழிலிடங்களில் எல்லாம், (எ - று.)

     இளமையுடைய ஆடவர் தம் தோழருடனே மகளிர் விரும்புதற்கேற்ற கோலந்தாங்கி
விளையாடுதலை இப் பொழிலிடங்களிலே யாண்டும் தவிர் தலிலர் என்க. தளையார் -
கட்டுதலிலர் - ஒழியார் என்றபடி.
 

( 174 )

வேறு
747.

அளியா 1டு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
விளையாடும் 2விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்
வளையார்கண் 3மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ
இளையாரை 4யினையவே யினையவே யிடமெல்லாம்.
 

      (இ - ள்.) அளியாடும் - வண்டுகள் ஆடாநின்ற அமரங்கள் - அந்த மரங்கள்,
மகிழ்ந்து - இளையார்கள், களிப்புற்று, ஆனா - ஒழிவின்றி, விளையாடும் விதம் -
விளையாடுதற்குத் தகுந்ததொரு வகையானே, மலர்ந்த - மலரா நின்றன, வளையார் -
வளையலணிந்த மலையர மகளிர்கள், இளையாரை - ஆண்டு விளையாடும் இளைஞர்களைக்
கண்டு, மகிழ்ப - மனமகிழ்ச்சி யடைவார்கள், அ மரங்கள் - அப்பூம்பொழிலின் கண்ணுள்ள
மரங்களும், மகிழ்ப - மகிழ்ச்சியுடையனவாய், மணிதூவும்விதம் - மணிகளைத்
தூவுமாப்போலே, மலர்ந்த மலர் சோர்வ - தாம் மலர்ந்துள்ள மலர்களை அவ்விளைஞர்கள்
மேலே பொழிவனவாம், இனைய இனைய - இப்பொழிலிடமெல்லாம் இத்தகைய
விளையாட்டிடங்களேயாம், (எ - று.)
 

( 175 )

வேறு
748.

தாமரைத் 5தடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தரவில்சீர்த்
தாமரை 6த் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே.

  


     (பாடம்) 1. யாடுமரங்கள் மரங்கள். 2. விதமலர்ந்த மலர்தர மணிவதூஉம். 3. மகிழ்ப மகிழ்ப (சில ஏட்டில் மரங்கள் மலர்ந்த மகிழ்ப என்னும் அடுக்கு இல்லை.). 4. இளையவே யிளையவே யிடமெல்லாம். 5. தடத்தின. 6. வெண்ணறும் மிகுகுணச், முலகினிநகுமே.