பக்கம் : 505 | | (இ - ள்.) தா இல் சீர் தாமரை தகு குணச்செல்வன் - குற்றமற்ற பெரும்புகழ் படைத்த, தாமரை என்னும் எண்ணளவு உயர்ந்த தகுதியுடைய குணங்களையே செல்வமாக வுடையோனே, தாம் மரை தடத்திடை - தாவுகின்ற மான்கள் மிக்க இந்நிலத்தின்கண்ணே, சாரல்வாய் தாமரைமலர்ந்த - சார்பிடங்களிலே தாமரைகள் மலர்ந்துள்ளன, துளையொடு, - மாதுளை மரங்களோடே, மறலி - குங்கும மரங்களும், சண்பகம் தாம் - சண்பக மரங்களும், அரைதடித்து - அடிப்பகுதி பருத்து, அலர் ததைந்து - மலர்கள் செறிந்து, தோன்றும் - தோன்றா நிற்கும், (எ - று.) தாமரை - ஓரெண். செல்வன் - அண்மை விளி. மறலி - குங்குமமரம் துளை - மாதுளை, (தலைக்குறை) இந் நிலத்தேயும் மருதநிலத்திற்குரிய தாமரைத் தடங்கள் திகழ்கின்றன; சண்பகம் குங்குமம் முதலிய மரங்களும் பருத்து வளமுடையனவாய்த் திகழ்கின்றன; என்றபடி. | ( 176 ) | வேறு | 749. | நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே. | (இ -ள்.) நாகம் - யானைகள், சந்தனத் தழைகொண்டு - சந்தன மரத்தின் தழைகளை ஒடித்துக்கொண்டு, நளிர்வண்டு ஓச்சும் - தம்மேல் மொய்த்துச் செறியும் அளிகளை ஓட்டும், நாகம் - சுரபுன்னைமரங்கள், சந்தனப் பொதும்பிடை - சந்தன மரச்சோலையின் ஊடே, நளிர்ந்து - செறிந்து, தாது - மகரந்தப்பொடிகளை, உமிழ்வ - உதிர்க்கும், நாகம் - பாம்புகள், செஞ்சுடர் - ஞாயிற்றை, நகும் - ஒவ்வாய் என நகைக்கும்மணி - மணியை, உமிழ்ந்து இருள் கடிவ - கான்று இருளை அகற்றும், நாகம் மற்றிது - இம்மலை, நாகர்தம் உலகினை நகும் - தேவருலகத்தை என்னை ஒவ்வாய் எனச் சிரிக்கும் என்பதாம், (எ - று.) முதல் அடியில் நாகம் - யானை; இரண்டாமடியில் நாகம் - சுரபுன்னை மரம்; மூன்றாமடியில் நாகம் - பாம்பு; நாலாமடியில் நாகம் - மலை. | ( 177 ) | வேறு | 750. | நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம் தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம் மகமலரன வசோகம் மவைதருவ வசோகம் பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர். | | |
|
|