பக்கம் : 506 | | (இ - ள்.) நகுமலரன நறவம் - விளங்கிய மலரையுடையன வாய்த் திகழும் குங்குமமரங்கள், அவைநறவம் சொரிவன - அக்குங்கும மரங்கள் தேனைப் பொழியாநிற்கும், தொகுமலரன துருக்கம் - நிறைந்த மலர்களையுடையனவாய்த் திகழும் இம்முல்லைக் காடுகள் அவை துருக்கம் தருவன - அக்காடுகள் நமக்கு மான்மதம் என்னும் மணப்பொருளை அளிப்பனவாம், அசோகம் அகம் மலரன - அசோக மரங்கள் தம்மகத்தே நிறைந்த மலர்களையுடையனவாய்த் திகழும், அவை தருவ அசோகம் - அவ்வசோக மரங்கள் தம்பால் வந்தாரின் அயர்வை நீக்குவனவாம், பலமலையன பாங்கர் - பலவாகிய மலைகளின் பக்கங்களில், பகுமலரன - பல்வேறுவகை மலர்களையுடைய, பாங்கர்-பூங்கொடிகள் படரா நிற்கும், (எ-று.) நறவம் - குங்குமமரம் - நறவம் - தேன், துருக்கம் - காடு - துருக்கம் - மான்மதம், அசோகம் - அயர்வின்மை. பாங்கர் - ஒருவகைப் பூங்கொடி; பாங்கரும் முல்லையும் (கலி. 111) பாங்கர் - பக்கம். | ( 178 ) | வேறு | 751. | அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல் 1வணங்கிளர் வனதோன்றி 2வகைசுடர் வனதோன்றி இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம். | (இ - ள்.) கோடல் - வெண்காந்தளிடத்தே, அணங்குஅமர்வன - தீண்டி வருத்தும் தெய்வங்கள் உறையும், அவை பிறர்கோடல் அரிது - ஆதலால் அவ்வெண்காந்தன் மலரையாரும் கொள்ளுதல் இயலாதாம்; வணங்கிளர்வன தோன்றி - செந்நிமமைந்தனவாகிய செங்காந்தள்கள், தோன்றி - எங்கும் காணப்பட்டு, வகைசுடர்வன - பல்வேறுவகை வண்ணமுடைய வாய்த் திகழா நிற்கும், இணங்கு, இணர்வன இஞ்சி - பொருந்திய பூங்கொத்துக்களை யுடைய இஞ்சிப் பூண்டுகள், எரி பொன் - ஒளிர்கின்ற பொன்னை ஒத்து மலர்வன, யுடையிஞ்சி - வாவிக்கரை களிடத்தே, மருதம் அயல்வரை - அயலதாகிய மருதநில எல்லைக்கண் உள்ள, வனமருதம் - அழகிய மருத மரங்கள், மணங்கமழ்வன - இங்குத் தம் மணம் கமழும்படி செய்யும், (எ - று.) இஞ்சி எரிபொன் - இஞ்சிமலர்கள் எரிபொன்போல் மலரும். புடையிஞ்சி - வாவிக்கரை. இஞ்சிப்புடை என்பது முன்பின் மாறி நின்றது. | ( 179 ) | வேறு | 752. | சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க் கேந்தி நின்றன விம்மலை யாரமே. | |
| (பாடம்) 1. லணங். 2. யவை. இணங்கிணர்வின. | | |
|
|