பக்கம் : 509
 

     சிதறுமாறு கலவிப் போராற்றிய பரிய அணையாகிய, பாவு செந்துகில்
உடைப்பள்ளிபோலும் - விரித்த செந்நிறமான துகிலையுடைய பள்ளியை ஒக்கும், (எ - று.)

     திங்கள் ஒளிபரவிய கற்பாறைகள் மேல் பூந்துகள் படிந்துள்ள தோற்றம், இளையவர்
திளைக்கும் பள்ளியைப் போலும் என்க.
 

( 184 )

வேறு
757.

அழலணி யசோகஞ் 1செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு 2பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே.
 

      (இ - ள்.) அழல் அணி அசோகம் - நெருப்புப் பிழம்பு நிமிர்ந்தாற் போன்ற
அழகிய அசோகமரம், செந்தாதணிந்து - தனது செவ்விய பூந்தாதாற் போர்க்கப்பட்டு, தேன்
அரற்ற நின்று - அளிகள் தன்னைச் சூழ்ந்துபாட நின்று, நிழலணி மணிக்கல் நீல
நிறத்தொடு - குளிர்ந்த அழகிய மரகதமணி யாகிய கல்லில் எழும் நீல வண்ணம்
கதுவப்பட்டு, நிமிர்ந்த - உயர்ந்து நின்ற, தோற்றம்-காட்சி, குழல் அணிகுஞ்சி
மைந்தர்-கடைகுழன்று அழகி தாகிய தலைமயிரையுடைய ஆடவர்கள், குங்குமக் குழம்பு பூசி
- குங்குமக் குழம்பைத் திமிர்ந்துகொண்டு, எழிலணி திகழ - எழுச்சிமிக்க அழகு
விளங்குமாறு, நின்றால் எனையநீர் - நின்றால் எத்தன்மையாகத் தோன்றுமோ, அனைய
தொன்றே - அத்தகைய தன்மையுடைய தொன்றாம், (எ - று.)

     நீலமணியின் ஒளி தன்பாற் பரவத் தீப்பிழம்பு போன்று மலர்ந்து திகழும் அசோகு,
ஆடவர்கள் குங்குமம் பூசி அணிதிகழ நின்றாற்போலும் என்க.
 

( 185 )

 

758.

இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
3தணந்தொளி விடாத வெண்டா மரைததைந் தனையதொன்றே.
 

     (இ - ள்.) தேன் இணைந்து முழங்க - அளிகள் தம் துணைகளுடனே சேர்ந்துபாட,
விண்ட ஏழிலம்பாலை - மலர்ந்த ஏழிலைம்பாலை மரத்தினது, வெண்பூ மணந்து - வெளிய
பூ மணங்கமழப் பெற்று, தாது அணிந்து - பூந்துகள் போர்க்கப்பட்டு, தோன்றும் -
காணப்படுகிற, மரகத மணிக்கற் பாறை - மரகதம் என்னும் கல்லாலியன்ற பாறை,
கணங்கெழு களி
 


     (பாடம்). 1. செஞ்சாந். 2. மூசி. 3. தணந் தொழில்.