பக்கம் : 510 | | வண்டால - கூட்டமாகக் குழீஇய களிப்புடைய வண்டுகள் பாட, பாசடை கலந்த பொய்கை - பசிய இலைகள் அடர்ந்த குளம், ஒளி தணந்து விடாத - ஒளியகலாத, வெண்டாமரை ததைந்தது அனையது ஒன்றே - வெள்ளிய தாமரைமலர்கள் செறியப்பெற்ற காட்சியை ஒப்பதொன்றாம், (எ - று.) ஏழிலைம்பாலை மலர்ந்து தாதணிந்து நிற்றலையுடைய மணிக்கற்பாறை வெண்டாமரைத் தடம்போல் விளங்கும் என்க. | ( 186 ) | | 759. | காரிருட் குவளைக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக் கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல் பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற் சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம். | (இ - ள்.) கார் இருள் குவளை கண்ணி - கரியதாய் இருண்ட குவளை மலர் மாலையையும், கதிர்நகை - ஒளியுடைய பற்களையும், கனம்பொன் தோட்டு - உயரிய பொன்னாலாய காதணிகளையும், கூர்இருள் சுரிபட்டன்ன குழலணி கொடிறு உண் கூந்தல் - செறிந்த இருள் சுருண்டாற்போன்று குழன்று அழகியதாய்க் கதுப்புகளைக்கௌவிய அளகத்தையும், பேரிருள் கிழியத் தோன்றும் பிறை எயிற்று - பெரிய இருள் பிளக்கும்படி ஒளிவீசும் பிறை போன்ற கோரப்பற்களையும், அமரநோக்கில், அமர்த்த பார்வை களையும் உடைய, சூரர மகளிர்கள் வாழும் இடம் - சூரர மகளிர்கள் வதியும் இடமாகும், சுடர்ப இவை எல்லாம் - ஒளிவீசித் தோன்றும் இவ்விட மெல்லாம், (எ - று.) இவ் விடமெல்லாம் கண்ணியையும் தோட்டையும் குழலையும் எயிற்றையும் நோக்கையும் உடைய சூரர மகளிர்கள் வாழும் இடம் என்க. | ( 187 ) | வேறு | 760. | வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக் காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண் நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார். | (இ - ள்.) நிறைபுனல் தடத்து வாழ்வார் - ஈண்டுள்ள நிறைந்த நீர்நிலைகளில் வாழ்பவர்கள், இருபுடையும் வார் வீக்கி - இரண்டு பக்கங்களினும் கச்சிறுக்கிக் கட்டப்பட்டு, வடம் சுமந்து - மணிவடங்களைத் தாங்கி, எழுந்து - பணைத்தெழுந்து, வேங்கை ஏர் இருஞ்சுணங்கு சிந்தி - வேங்கைமலரின் நிறம் போன்ற பொன்னிறமான பெரிய தேமல் பாய்ந்து, | | |
|
|