பக்கம் : 511 | | எழுகின்ற இளமென் கொங்கை - எழுச்சியையுடைய இளைமையுடைய மெல்லிய முலைகளையும், அங்கொண்டை கார் இருங்குழல் - அழகிய கொண்டையாகப் புனையப் பெற்ற கரிய பெரிய கூந்தலையும், கதிர்நகை கனகப் பைம்பூண் - சுடரால் திகழ்கின்ற பொன்னாலாகிய பசிய அணிகலன்களையும் உடைய, நீரர மகளிர் கண்டாய் - நீரர மகளிர்கள் ஆவார் என அறிதி, (எ - று.) | ( 188 ) | | 761. | மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைந்துகீ ழிருண்ட தாழ்வர் ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம் நாகமா மகளி ரென்னு நங்கையர் 1குடையப் பொங்கி மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே. | (இ - ள்.) மேகம் மேல் தவழ்ந்து - முகில்கள் உச்சியில் தவழப்பெற்று, வேய்கள் மிடைந்து - மூங்கிற் புதர்கள் செறிந்து - கீழ் இருண்ட தாழ்வர் - கீழே இருண்டு கிடக்கும் தாழ்வரை யிடங்களையுடைத்தாய, ஏகமா மலையின் நெற்றி - ஒன்றாய் உயர்ந்து தோன்றும் அப்பெரிய, மலையின் உச்சியிலுள்ள, இருஞ்சுனைத் தடங்கள் எல்லாம் - பெரிய சுனைகளில் எல்லாம், நாகமா மகளிர் என்னும் நங்கையர் - வரையர மகளிர்கள் என்று கூறப்படும் மகளிர்கள், குடைய - நீராடுதலாலே, பொங்கி - அச்சுனைநீர் பெருகி, மாகமேல் தரங்கம் வீசி - வானுலகத்தின் மிசை அலையெறிந்து, மணிஅறை கழுவும் அன்றே- ஆண்டுள்ள மாணிக்கக் கற்பாறைகளைக்கழுவும், (எ - று.) மலையின் உச்சியில் அமைந்த பெரிய சுனைகளிலே வரையரமகளிர் குடைந்து விளையாடுதலாலே அவை பொங்கி அருவியாய் வந்து மணிப் பாறையைக் கழுவும் என்க. நாகமாமகளிர். வானவர் மகளிருமாம். | ( 189 ) | | 762. | ஆவிவீற் றிருந்தகாத லவரொடு கவரி வேய்ந்து நாவிவீற் றிருந்து நாறு நளிர்வரைச் சிலம்பின் 2மேயார் காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய் 3பாவின்வீற் றிருந்த பண்ணி 4னாமுதினாற் படைக்கப்பட்டார். | (இ - ள்.) ஆவிவீற்றிருந்த காதல் அவரொடு - தம் உயிரின்கண் வீற்றிருந்தாற்போன்ற ஆழ்ந்த காதலரொடு, கவரிவேய்ந்து - கவரிமாவின் மயிர்க்கற்றையைச்சூடி, நாவிவீற்றிருந்து நாறும் நளிர்வரை - கத்தூரி இடையறவின்றி மணக்கும், செறிந்த மூங்கில்களையுடைய, சிலம்பின் மேயார் |
| (பாடம்) 1. குடைந்து. 2. மேலார். 3. பாவுவீற். 4. அமிழ்தினால். | | |
|
|