பக்கம் : 512 | | - மலையினிடத்தே எய்திய மகளிர்கள், காவிவீற்றிருந்த கண்ணார் - நீலோற்பலம் போன்ற கண்ணினராகிய, கந்தர்வ மகளிர் கண்டாய் - கந்தருவ மகளிர்கள் ஆவார் என அறிவாயாக, (அவர்கள் எத்தகைய ரெனில்) பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினாற் படைக்கப்பட்டார் - பாடலின்கண் அமைந்திருந்த பண்ணினது இசையமுதினால் உடல் படைக்கப்பட்டாற் போன்ற இனிமையுடையார், (எ - று.) உயிர்போலும் காதலுடையோருடன் அம்மலையிடத்தே உள்ளோர் பண்ணாலே உடல்படைத்தாற் போன்ற இனிமை மிக்க கந்தருவ மகளிர் என்க. | ( 190 ) | | 763. | அலங்கிண ரணிந்த 1விஞ்சை 2யரிவைய ரிடங்கள் கண்டாய் விலங்கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் 3கபாட மாடம் இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய் நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம். | (இ - ள்.) விலங்கலின் விளங்குகின்ற - அந்த மலையின்கட்டிகழ்கின்ற, வெள்ளிவெண் கபாடமாடம் - வெள்ளியாலாகிய கதவுகளையுடைய மண்டபம், அலங்கிணர் அணிந்த - அசைகின்ற பூங்கொத்துக்களை அணிந்துள்ள, விஞ்சையரிவையர் - விச்சாாதர மகளிர்கள் வாழும், இடங்கள் கண்டாய் - இடங்கள் என அறிக!, நலங்கிளர் - எழில் திகழ்கின்ற, பசும்பொன் கோயில் - பசிய பொன்னாலாகிய கோயில்களையுடையவாய், நகுகின்ற நகரமெல்லாம் - விளங்குகின்ற எல்லா நகரங்களும், இலங்கு ஒளிமகரப் பைம்பூண் - விளங்கும் ஒளியையுடைய மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட பசிய அணிகலன்களையுடைய, இயக்கியர் இடங்கள் கண்டாய் - இயக்க மகளிர்கள் வாழும் இடம் என அறிக (எ - று.) | ( 191 ) | | 764. | போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ டாய்நிழற் றுளும்ப வானோ ரசதியா டிடங்கள் கண்டாய் சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய 4பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்குமண் டபங்க ளெல்லாம். | (இ - ள்.) நிழல்துளும்பும் மேனி - ஒளி மிளிர்கின்ற மேனியையுடைய, புணர்முலை அமிர்து அனாரோடு - புணர்தற்குக் காரணமான முலைகளை யுடைய அமிழ்தத்தை ஒத்த தம் மகளிர்களுடனே, போய் - சென்று, |
| (பாடம்) 1. கோதை. 2. யரும் பெறலவர்கள். 3. கபாடமாட விலங்கொளி. 4. வாய்நிழற். | | |
|
|