பக்கம் : 513 | | ஆய்நிழல் துளும்பு அவ்வானோர் - ஆராய்தற்குரிய ஒளிமிக்க அவ்வமரர்கள், அசதியாடு இடங்கள் - பரிகசித்து விளையாடுதற்குரிய இடங்கள் ஆகும், சேய் நிழல் திகழும் செம்பொன் - சிவந்த ஒளியினால் விளங்கும் செவ்விய பொன்னாலாகிய, திலதவேதிகைய ஆய - புள்ளியிடப் பட்ட தெற்றிகளை உடையவாகிய, நிழல்பாய் பவளச்செங்கால் - ஒளிகாலும் பவளத்தூண்களையுடைய, பளிக்கு மண்டபங்கள் எல்லாம் - பளிங்காலியன்ற அந்த மண்டபங்கள் அனைத்தும், ( ) ஆய்நிழல் நுண்ணிதாய ஒளிக்கதிர் எனினும் ஆம். திலதவேதிகை - உயரிய வேதிகை எனினும் பொருந்தும். ஆண்டுத் தோன்றும் பவழச் செங்கால் பளிக்குமண்டபங்கள் எல்லாம், அமிர்தனாரோடு வானோர் அசதியாடிடங்கள் என்க. | ( 192 ) | | 765. | எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய் முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக 1ஞாயிற் செழுமணிச் சிகரகோடிச் சித்திர கூட மெல்லாம். | (இ - ள்.) முழுமணி - தோட்கப்படாத மாணிக்கங்களாலியன்ற, புரிசைவேலி - மதிலாகிய வேலியையும், முத்தம் மண்டபத்தவாய - முத்துக்களாலியன்ற மண்டபங்களையுமுடையனவாகிய, கழுமணிக்கபாட வாயில் - அராவிய மணிகள் பதிக்கப்பட்ட கதவுகளையுடைய வாயிலும், கதிர்நகைக் கனகஞாயில் - ஒளிக்கற்றைகளாற்றிகழும் பொன்னாலியன்ற எண்ணிறந்த சிகரங்களையும் உடையவாய்த் திகழும், சித்திரகூடங்கள் எல்லாம் - எழுதெழிலம் பலமனைத்தும், எழின்மணிச் சுடர்கொள்மேனி - அழகிய மணியின் ஒளியை ஒத்த மேனியையுடைய, இமையவர் - இடங்கள் கண்டாய் - தேவர்கள் வாழும் இடங்கள் என அறிதி. ( ) மணிப்புரிசையினையும், முத்தமண்டபங்களையும், மணிக்கபாடங் களையும், கன கஞாயில்களையும், சிகரகோடியையும் உடைய இச்சித்திர கூடமெல்லாம் இமையவர் இடங்கள் என்க. | ( 193 ) | | 766. | தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால் வம்பவாங் குழலி னேங்க மணியறை யரங்க மாக உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய். | (இ - ள்.) தும்பிவாய் துளைக்கப்பட்ட கீசகம் - வண்டுதன் வாயால் தொளைக்கப்பட்ட மூங்கில், வாயுத்தன்னால் - காற்று வீசுதலாலே, வம்பு |
| (பாடம்) 1 நாறிற் - நாயிற். | | |
|
|