பக்கம் : 514 | | அவாம் - புதிய இசையழகை அவாவு தலையுடைய, குழலின் ஏங்க - குழல் என்னும் இசைக் கருவி போன்று ஒலிக்கவும், மணியறை - மணிகள் பரவிய நிலம், அரங்கம்ஆக - கூத்தாட்டரங்கு ஆகவும், உம்பர்வான் மேகசால ஒலி - உயரிய விசும்பின்கண் உள்ள முகில்களின் முழக்கம், முழாக்கருவியாக - மத்தள ஒலியாக அமையவும், தேன்பாட - அளிகள் இசைபாட, மஞ்ஞை நாடகம் நவில்வ - மயில்கள் விறலியர்போல் கூத்தாடுதலை, நம்ப காணாய் - பெருமைமிக்க திவிட்டனே நீ காண்க! (எ - று.) வண்டுகளாற் றுளைக்கப்பட்ட மூங்கில்களிலே காற்று நுழைதலாலே, அது குழல்போலிசை யெழுப்ப, மணியறையை அரங்காகக் கொண்டு முகில் ஒலி முழவாக வண்டுபாட மயிலாடும் நாடகம் என்க. | ( 194 ) | | 767. | பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக் கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ண னுவப்பக் காட்டி மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் 1மலையின் மேலால் இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு 2ணீங்க லுற்றார். | (இ - ள்.) பொன் அவிர் மகரம் பைம்பூண் - அழகு திகழ்கின்ற மகரமீன் வடிவிற் செய்த பசியஅணிகலன்களையும், பொலம்குழை - பொற்குண்டலங்களையும், இலங்குசோதி - விளங்கும் ஒளியையும், கல்நவில் வயிரம் திண்டோள் - கல்லை ஒத்த உறுதியுடைய திண்ணிய தோளிணை களையும் உடைய, கடல்வண்ணன் உவப்பக்காட்டி - திவிட்டன் மகிழும்படி அம்மலைவளங்களை எடுத்துக்காட்டி, மன்நவின்று இறைஞ்சும் செய்கை வளைவண்ணன் - மன்னர்கள் புகழ்ந்து வணங்குதற்குரிய உயரிய ஒழுக்கமுடையவனான விசயன், மலையின்மேலால் - அம்மலை நிலத்தின் மிசை, இன்னன - இவைபோல்வன, பகர்ந்து - சொல்லியவாறே, சொல்லும் எல்லையுள் நீங்கலுற்றார் - கூறப்படும் அம்மலைநிலத்தின் எல்லையைக் கடந்து சென்றனர், ( ) பைம்பூணையும், இலங்கும் சோதியையும், திண்டோளையும் உடைய கடல்வண்ணன் மகிழுமாறு குறிஞ்சிவளங்காட்டி, வளைவணன் செல்லும்போது அவ்வெல்லை நீங்கலுற்றா என்க. | ( 195 ) | | 768. | பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ 3நிரந்த பாங்கர் மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம் காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் 4காட்டி யோசனை யெல்லை 5சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான். | |
| (பாடம்) 1. தலை. 2. ணிலங்கலுற்றார் - ன். 3. நிரந்து காட்ட. 4. காட்ட. 5. சான்று. | | |
|
|